தேர்தல் பார்வையாளரா போன இடத்துல… மதபோதகன் வேலை செய்தா… அதான் தொரத்தி வுட்டுட்டாங்க!

இந்தியா உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்

umashankar - 2026மத்திய பிரதேசத்துக்கு தேர்தல் பார்வையாளரா போய்ட்டு… தலைவலின்னு ஆஸ்பத்திரி போயிருக்கான். அங்கபோய் மத்த பேஷன்டுகளுக்கு… தலைல கையவெச்சு, ஏசப்பா ட்ரீட்மென்ட் குடுக்க ஆரம்பிச்சுட்டான். நடுநிலைபேசி, விசிலடிச்சு கைதட்ட… அதென்ன மானங்கெட்ட தமிழ்நாடா ? தேர்தல் கமிஷனுக்கு புகார்போனதும், பேக்பண்ணி தமிழ்நாட்டுக்கு அனுப்பிட்டாங்க.

படிக்காத பாமரனும் அதே வேலைய பண்றான், IAS படிச்சவனும் அதே வேலைய பண்றான். இன்னைக்கு நாட்டுல பெரும்பாலான பிரச்சனைகளுக்கு மிக முக்கிய காரணமே, இந்த மாதிரியான மதமாற்ற குரூப்புங்கதான். சும்மா அடுத்தவன சொரண்டிகிட்டே இருந்தா… ஹிந்துக்கள் அமைதியா போவான். டென்ஷனான பாயிங்க, ஏசுநாதர் வாயில குண்டு வெக்காம வேறென்ன பண்ணுவாங்க ? !!

– இப்படி ஒரு பதிவு சமூக வலைத்தளங்களில் பரவலாகிக் கொண்டிருக்கிறது. செய்தி இதுதான்…

umashankarias - 2026

மத போதனை செய்தார் உமாசங்கர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தேர்தல் பார்வையாளராக பணிக்குச் சென்ற தமிழக ஐஏஎஸ் அதிகாரியான உமா சங்கர் மதப் பிரச்சாரம் செய்ததாக மத்திய பிரதேச மாநிலத்தில் பிரச்சனை எழுந்தது

மத்திய பிரதேச மாநிலத்தில் தேர்தல் பார்வையாளராக பணியில் இருந்த உமாசங்கர் மதப் பிரச்சாரம் செய்ததால் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் தேர்தல் பார்வையாளராக தமிழக ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் நியமிக்கப்பட்டார். அவர் சித்தி மக்களவைத் தொகுதியில் தேர்தல் பார்வையாளராக பணியாற்றினார். அப்போது அவர் சித்தி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று இருக்கிறார்.

அந்த மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளுக்கு அவர் மத போதனை செய்துள்ளார். இதையடுத்து அந்த மருத்துவமனை அதிகாரிகள் உமாசங்கரிடம் இந்த மாதிரி செய்யாமல் ஓய்வு எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் உமாசங்கர் அதை செவி மடுக்கவில்லை.

மேலும் அவர் தான் தங்கியிருந்த இடத்திலும் இதேபோன்று மதப் பிரச்சாரம் செய்வதாக புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து மத்திய பிரதேச மாநில தலைமை தேர்தல் அதிகாரி காந்தாராவ் தேர்தல் பார்வையாளர் பொறுப்பில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்

இதுகுறித்து காந்தா ராவ் கூறுகையில், உமாசங்கர் தங்கியிருந்த இடத்தில் மதப் பிரச்சாரம் செய்ததாக புகார்கள் வந்தன அது குறித்து விசாரித்த பிறகு அந்த அறிக்கை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டது

அத்துடன் சித்தி தொகுதி தேர்தல் பார்வையாளர் பொறுப்பிலிருந்து உமாசங்கரின் நீக்கப்பட்டுள்ளார் அவருக்கு பதிலாக இமாச்சல பிரதேசத்தில் இருந்து ஐஏஎஸ் அதிகாரியான பாரதி நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறினார்

ஏற்கனவே கடந்து 2015ஆம் ஆண்டு உமாசங்கர் பொது இடங்களில் மதப் பிரச்சாரம் செய்ததும் மதபோதனை செய்ததும் பிரச்சனையை ஏற்படுத்தியது. அதையடுத்து தமிழ்நாடு அரசு உமாசங்கரை கண்டித்தது மேலும் இது போன்று அவர் தொடர்ந்து செய்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அவருக்கு அறிவுறுத்தி இருந்தது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.