ஹைதராபாத் சஞ்சீவய்யா பூங்கா தீயில் எரிந்து நாசம்!

Published:

hyderabad fire - 2026

புதன்கிழமை (மே 15) நேற்று மதியம் ஹைதராபாத் சஞ்சீவய்யா பூங்காவில் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இதில் பூங்கா எரிந்து நாசமானது.

கம்போஸ்ட் எருவுக்காக சேகரித்து வைத்திருந்த காய்ந்த புல் குவியல் மீது நெருப்புப் பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த  தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சித்தனர்

ஒரே ஒரு தீயணைக்கும் வாகனம் மட்டுமே அங்கு  வந்ததால் தீயை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்தப் பூங்காவில் இருந்த பல மரங்களும் செடிகளும் தீயின் வெப்பத்தால் முற்றிலும் கருகின.

நர்சரியில் இருந்த பல செடிகள் எரிந்து சாம்பலாகின மின்சார கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொளுத்தி எடுக்கும் வெய்யில் காரணமாக, செடிகொடிகள் காய்ந்து, தீப்பிடிக்கும் நிலையில் வறட்சியில் உள்ளன.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img