பேஸ்புக் பதிவால் தொடங்கிய கலவரம்! இலங்கையில் மீண்டும் ஊரடங்கு! சுமார் நூறு பேர் கைது!

இதை அடுத்து பல பகுதிகளில் மீண்டும் பதற்றநிலை ஏற்பட்டது! போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய சுமார் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

இலங்கையில் ஒரு பேஸ்புக் பதிவால் சிலாபத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் கலவரம் மூண்டது. தொடர்ந்து நிலவிய கலவரத்தாலும் வன்முறைகளாலும் இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு போடப் பட்டது .

சிலாபத்தில் முஸ்லிம் வர்த்தகரின் பேஸ்புக் பதிவால் சிங்கள இளைஞர்கள் கோபமுற்று முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் தொடுத்தனர். .

பேஸ்புக்கில், இன ரீதியான கருத்தொன்றை பதிவிட்ட முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு எதிராக பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவரது ஹஸ்மார்ஸ் எனும் துணிக்கடையும் சேதமாக்கப்பட்டுள்ளது.

இதனால் சிலாபம் நகரில் பதற்றம் நிலவியது. அப்போது பாதுகாப்புப் படையினர் வானை நோக்கி சுட்டு கலகக் காரர்களை கலைத்தனர். இதை அடுத்து முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டம் தீவிரமானது. அப்போது, இப்பகுதியில் புர்கா அணிந்து சென்ற பெண்ணை அப்பகுதி சிங்கள மக்கள் போலீஸில் பிடித்துக் கொடுத்துள்ளார்கள்.

மேலும் சிரிக்காதீர்கள். ஒரு நாள் நீங்கள் அழுவீர்கள்…  என்று ஒரு கருத்தைப் பதிவிட்டிருந்தார் ஹஸ்மார் ஹமீத் என்பவர். இதை அடுத்து கலவரம் மூண்டது.

தொடர்ந்து, இலங்கையில் இஸ்லாமியர்களின் கடை வீடுகளை அடித்து நொறுக்கிய நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!  இந்நிலையில் இலங்கை முழுவதும் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது!

இலங்கையில் அண்மையில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ சர்ச்சுகள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களைக் குறிவைத்து தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்!

இந்த நிகழ்வுக்குப் பின்னர் இலங்கையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது! இந்தப் பதற்றநிலை அண்மைக் காலத்தில் படிப்படியாக தணிந்து இயல்பு நிலைக்கு இலங்கை திரும்பி வந்தது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவத் தொடங்கின! இதை அடுத்து இலங்கையின் வடமேற்குப் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே கலவரம் ஏற்பட்டது! அங்கே முஸ்லிம்களின் கடைகள் மற்றும் வீடுகள் அடித்து நொறுக்கப் பட்டன.

பதற்றமான சூழல் ஏற்பட்டதால் சில நகரங்களில் நேற்று முன்தினம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது! தொடர்ந்து நேற்று காலை ஊரடங்கு உத்தரவு திரும்பப் பெறப்பட்டது! ஆனால் மீண்டும் இரு தரப்பினரிடையே மோதல் தொடங்கிய நிலையில் கொட்டாரமல்லா என்ற இடத்தில் அமீர் என்பவர் கலவரக்காரர்களால் கொல்லப்பட்டார்

இதை அடுத்து பல பகுதிகளில் மீண்டும் பதற்றநிலை ஏற்பட்டது! போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய சுமார் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்பட்டது! சமூக வலைதளங்களும் முடக்கப்பட்டுள்ளன.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...