
நண்பரின் மனைவியை உல்லாசத்திற்கு வற்புறுத்திய மீன் வியாபாரியை கண்டதுண்டமாக வெட்டிக்கொன்ற உறவினா்கள்…!
ஜாலியாக இருக்கலாம் வா என்று முன்னாள் நண்பரான மீன் வியாபாரி அடிக்கடி உறவுக்கு அழைத்துக் கொண்டே இருந்ததால் ஆத்திரமடைந்த பெண் தனது குடும்பத்தினரிடம் கூற, அவர்கள் கொந்தளித்து குடும்பமே சேர்ந்து அந்த மீன் வியாபாரியை கண்டம் துண்டமாக வெட்டி ஜோலியை முடித்துள்ளனர். பெங்களூரில் நடந்த அதிர்ச்சியான சம்பவம்
டிஜி ஹள்ளி ரோஷன் நகர் பகுதியில் வசித்து வந்தவர் ஜரார். 38 வயதாகிறது. இவரது குடும்பமும், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் குடும்பமும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.
சமீபத்தில் ஏதோ பிரச்சினை காரணமாக பேசிக் கொள்வதை நிறுத்தி விட்டனர். இந்த நிலையில் ஜரார், அந்தப் பெண் தனது கடைப் பக்கம் வரும் போதும் போகும்போதும் பேச்சுக் கொடுத்துள்ளார்.
ஜாலியாக இருக்கலாம் வா என்று கூப்பிட்டு வந்தார். ஆனால் அப்பெண் அதை நிராகரித்து சண்டை போட்டு விட்டு வருவாராம். இப்படியே இது சில நாட்களாக தொடர்ந்து வந்துள்ளது.
கோபமடைந்த ஜரார் நன்றாக குடித்து விட்டு அப்பெண்ணின் வீட்டிற்குச் சென்று தகாத முறையில் பேசி வம்பு சண்டை இழுத்துள்ளார்.
இதனால் கோபமடைந்த பெண் தனது கணவருக்கும், சகோதரர்களுக்கும் போன் செய்து ஜரார் தம்மிடம் வம்பு செய்வதை கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 4. 30 மணி இருக்கும். ஜரார் தனது வீட்டில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த பெண்ணின் கணவர் ரிஸ்வான், சகோதரர்கள் முகம்மது இஷாக், முகம்மது கெளஸ், சாதிக், உறவினர்கள் சையத் அகமது, சல்மான் ஆகியோர் சேர்ந்து சரமாரியாக ஜராரை வெட்டிக் கொன்றனர்.
உடல் முழுவதும் விழுந்த வெட்டுக்களால் ஜரார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். தகவல் பரவியதும் போலீஸார் வந்து உடலைக் கைப்பற்றினர்.
தீவிர தேடுதல் வேட்டையில் கொலையாளிகள் அனைவரும் சிக்கினர். குடும்பமே சேர்ந்து மீன் வியாபாரியைக் கொன்று குவித்த சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



