“Sum, Son, Son– தானே நீ”
“பெரியவாளின் ஹாஸ்ய உணர்ச்சிக்கு ஒரு சிறு பதிவு”

கட்டுரை-ரா வேங்கடசாமி.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
ஒரு தடவை பட்டாபி என்றொரு பக்தர் மகானைத்
தரிசனம் செய்ய நேரில் வந்தார்.
அவர் ஆசீர்வதித்தபடியே புன்முறுவல் செய்த மகான் “Sum, Son, Son தானே நீ” என்றார்.
பட்டாபிக்கு மகான் என்ன சொல்கிறார் என்றே
புரியவில்லை.மகான் அருகில் அழைத்தார்.
“நான் சொன்னது உனக்குப் புரியவில்லையா?”
“இல்லை” என்பது போல் பட்டாபி தலையை ஆட்டினார்.
“Sum, Son, Son என்றேன்” என்றார் மகான்.
என்னவென்று தெரிந்தால் தானே புரிந்து கொள்ள.
மகான் வாய்விட்டு சிரித்தபின் சொன்னார்.
“Sum” என்றால் கணக்கு இல்லையா?”
“ஆமாம்”
“Son” என்றால் பிள்ளை தானே?”
“ஆமாம்”
“Son” என்றால் பிள்ளை தானே?
“ஆமாம்”
“கணக்குப்பிள்ளையோட பிள்ளைதானே நீ என்று கேட்டேன்” என்றார் மகான்,பலமாகச் சிரித்தபடி…
பட்டாபியின் தந்தை கணக்குப் பிள்ளை உத்யோகம்
பார்த்தவர்.
ஆன்மீகத்தின் நடுவே இப்படிப்பட்ட ஹாஸ்ய உணர்ச்சிகளும் அவ்வப்போது வெளிப்படுவது உண்டு



