நம் மீதான எதிர்பார்ப்பு முன்பை விட அதிகரித்திருக்கிறது: பிரதமர் மோடி!

Published:

modi in campaign - 2026

பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்று 5 வருடம் நிறைவடைய உள்ள நிலையில், அதுகுறித்து தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.

குஜராத் முதல்வராக இருந்து பின்னர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் வேட்பாளர் ஆகி, இரு தொகுதியில் போட்டியிட்டு, இரண்டிலும் வென்று, வாராணசி தொகுதியை மட்டும் வைத்துக் கொண்டு, பிரதமராகப் பதவி வகித்து, ஐந்து வருடத்தை நிறைவு செய்கிறார் பிரதமர் மோடி.

இந்நிலையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது 5 வருடங்களுக்கு முந்தைய தனது நினைவுகளைச் சொல்லி அவை நீங்காத பசுமையான நினைவுகள் என்று சிலாகித்துள்ளார்.

130 கோடி இந்தியர்களின் ஆசிகளுடன் தாம் தமது பணிக்கு வந்ததாகவும், அவர்களின் ஆசிகளை நிறைவேற்றுவதற்காக உழைத்ததாகவும் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, பாதுகாப்பான,வலிமையான, வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைப்பதற்காகப் பணியாற்றியதாகக் கூறியுள்ளார்.

இன்று நம் மீதான எதிர்பார்ப்பும், ஆதரவும் மேலும் அதிகரித்திருக்கிறது என்று கூறியுள்ள மோடி, மக்களின் கனவுகள் நனவாவதற்காக மேலும் கடுமையாக உழைப்போம் என்று கூறியுள்ளார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img