தேர்தல் முடிவுகள் 2019 : வாக்கு எண்ணிக்கை தொடக்கம்! முன்னிலை நிலவரம்!

Published:

rahul modi - 2026

நாடாளுமன்ற மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (மே.23) காலை 8 மணிக்கு தொடங்கியது. மேலும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை அடுத்து வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மக்களவைக்கு மொத்தமுள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர்த்து 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்துள்ளது. தமிழகத்தில் 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்துள்ளது. அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, ஒடிசா மற்றும் சிக்கிம் மாநிலங்களில் சட்டசபை தேர்தலும் நடந்துள்ளது.

இவை அனைத்துக்கும் இன்று காலை 8:00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகத்தில், 45 மையங்களில் வாக்க்கள் எண்ணப் படுகின்றன.

வாக்குக்கள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தொடக்கத்தில் முன்னிலை நிலவரங்கள் தெரிவிக்கப் பட்டு வருகின்றன. இதில் தேஜகூ, முன்னிலை பெற்றது.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

Related articles

Recent articles

spot_img