ப்ளீஸ் ராகுல்… ராஜினாமா செய்துடாதீங்க… உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் காங்கிரஸ் தொண்டர்கள்!

இந்தியா சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

rahul residency - 2026

ப்ளீஸ் ராகுல்.. ராஜினாமா செய்துடாதீங்க என்று கோரிக்கைகளை முன்வைத்து, காங்க்ரஸ் தொண்டர்கள் ராகுல் வீட்டை முற்றுகையிட்டனர்.

நடந்து முடிந்த 17வது மக்களவைக்கான தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது காங்கிரஸ். நாடாளுமன்றத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக, திகழ 55 தொகுதிகளில் வென்றிருக்க வேண்டும் ஆனால் காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் வென்றதால் எதிர்க்கட்சி அந்தஸ்தும் போய் விட்டது. கடந்த முறையைப் போலவே இம்முறையும் படுதோல்வி அடைந்ததால், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து தாம் விலகுவதாகக் கூறினார் ராகுல்காந்தி.

70 ஆண்டு பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் இப்படி படுதோல்வி அடைந்து இந்த மக்களவைத் தேர்தலில் சோபிக்காததால் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாகத் தெரிவித்தார்.

இதற்கு அக்கட்சியின் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இக்கட்டான நிலையில் ராகுல் தலைவராக இருந்து வழிநடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். நேற்று காலை நடிகர் ரஜினியும் இதை மொழிந்தார். தொடர்ந்து திமுக., தலைவர் ஸ்டாலினும் ராகுலுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, அவரை ராஜினாமா செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தினார்.

இந்நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்த தில்லி மாநில முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் அவரிடன் ராஜினாமா செய்யவேண்டாமென வலியுறுத்தினார். பின்னர் ஷீலா தீட்சித் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பதாகை ஏந்தி போராட்டம் நடத்தினர்

அதேபோல் சென்னையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவராக தொடர வலியுறுத்தி சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே . எஸ் அழகிரி தலைமையில் தொண்டர்கள் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தினர். அப்போது 2 தொண்டர்கள் தீக்குளிக்க முயற்சி மேற்கொண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், பெட்ரோலை தனது தலையில் ஊற்றிக்கொண்ட தொண்டர்கள் மீது அருகில் இருந்த தொண்டர்கள் தண்ணீரை ஊற்றி அணைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.