விடாது துரத்தும் 2ஜி ஊழல்: கனிமொழி, ஆ.ராசாவுக்கு மீண்டும் நோட்டீஸ்!

இந்தியா சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

a raja kanimozhi - 2026

காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசு 2004-2009 ஆண்டு ஆட்சியில் இருந்தபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இதை அடுத்து கடந்த 2010-ல் தனது அமைச்சர் பதவியிலிருந்து ஆ.ராஜா ராஜினாமா செய்தார்.

அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் அப்போதைய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி மீது 2011-ஆம் ஆண்டில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. அந்த விசாரணையில் 17 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் இந்த வழக்கு சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி தலைமையில் நடைபெற்றது.

176000 கோடி ரூபாய் என்று சொல்லப் பட்டாலும், பின்னர் சுமார் முப்பதாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.

பல கட்டங்களாக நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 2017ல் போதிய ஆதாரங்களை சிபிஐ சமர்ப்பிக்கவில்லை எனக் கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்து அனைவரையும் விடுவித்தார் நீதிபதி ஓ.பி.சைனி.

இந்நிலையில், இவர்களின் விடுதலையை எதிர்த்து, தில்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு இருந்தது.

அதை ஒட்டி, தற்போது நீதிமன்றம் கனிமொழிக்கும், ஆ.ராஜாவுக்கும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இதன் விசாரணை ஜூலை 30 ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது.

தற்போது இருவரும் மக்களவைக்கு எம்.பி.க்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

1 thought on “விடாது துரத்தும் 2ஜி ஊழல்: கனிமொழி, ஆ.ராசாவுக்கு மீண்டும் நோட்டீஸ்!”

  1. ஊழ்வினை உரத்துவன் ஊட்டும் . முற்பகல் செயின் பிற பகல் vilayum

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.