மும்பையில் இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டடம்! அதிர்ஷ்டவசமாய் தப்பிய இளம்பெண்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

mumbai girl survived - 2026

கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக இளம் பெண் ஒருவர் உயிர் தப்பினார்.

மும்பையில் பழமையான அடுக்குமாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது. இதில், இளம்பெண் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார்.

மும்பை நகரில், கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழையால், டோங்க்ரி நகரிலிருந்த நூறு ஆண்டு பழைமை வாய்ந்த 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது.

இந்த கோர விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் இடிபாடுகளை அகற்றி, அதில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர். அப்போது மரக்கதவுகள் மற்றும் இரும்புத் தூண்களுக்கு இடையே பெண்ணின் கை ஒன்று அசைவதைக் கண்ட குழுவினர் உடனடியாக அவரை மீட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.