விமானம் அனுப்புறேன்… நேர்ல வந்து பாருங்க.. பிறகு பேசுங்க..! ராகுலுக்கு காஷ்மீர் ஆளுநர் பதிலடி!

Published:

satyapalmalik - 2026

காஷ்மீரில் வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாக இந்நாள் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் கூறியதற்கு காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் திங்கள்கிழமை பதிலடி கொடுத்துள்ளார். காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு வந்து கள நிலவரத்தை கவனிக்க, தாம் ஒரு விமானம் அனுப்பி வைப்பதாக அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஒரு “முட்டாள்” போல் பேசிக் கொண்டிருந்த தனது கட்சியின் தலைவர்களில் ஒருவரின் நடத்தை குறித்து ராகுல் காந்தி வெட்கப்பட வேண்டும் என்று கூறினார் ஆளுநர் சத்யபால் மாலிக்.

“ராகுல் காந்தியை இங்கு வருமாறு அழைத்தேன். இங்கு வந்து நிலைமையை கண்காணிக்கவும்! பின்னர் பேசவும்! அதற்காக நான் உங்களுக்கு ஒரு விமானத்தை அனுப்புகிறேன். நீங்கள் ஒரு பொறுப்பான நபர், நீங்கள் இப்படி பேசக்கூடாது” என்று மாலிக் கூறினார்.

காஷ்மீரில் வன்முறை ஏற்பட்டுள்ளதாக சில அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் கொடுத்த பேட்டிகள் மற்றும் அறிக்கைகள் குறித்த கேள்விக்கு சத்யபால் மாலிக் பதிலளித்தார்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

முன்னதாக, சனிக்கிழமை இரவு ஜம்மு-காஷ்மீரிலிருந்து அங்குள்ள வன்முறைகள் குறித்து சில தகவல்கள் வந்துள்ளதாகவும், இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படையாக உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ராகுல் கூறினார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவு நீக்கப் பட்டதில், வகுப்புவாத அல்லது மதவாத கண்ணோட்டம் ஏதும் இல்லை என்றார் ஆளுநர்.

“பிரிவு 370 மற்றும் 35-ஏ ஆகியவற்றை அகற்றுவது அனைவருக்குமாகவே உள்ளது. லே, கார்கில், ஜம்மு, ராஜோரி-பூஞ்ச் ​​ஆகியவற்றில் அதை அகற்றுவதில் இனவாத கோணம் இல்லை! வகுப்புவாத கோணமும் இல்லை” ன்றார்.

Rahul and chidu - 2026இவ்வாறு பிரச்னை ஏற்படுத்த வேண்டும் என்று சிலர் விரும்புகின்றனர். ஆனால் அவர்கள் அதில் வெற்றிபெறவில்லை. வெளிநாட்டு பத்திரிகைகள் தவறான செய்திகளை வெளியிட்டு, ஒரு முயற்சியை செய்துள்ளன! நாங்கள் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம். எல்லா மருத்துவமனைகளும் உங்களுக்காக திறந்திருக்கும், ஒரு நபரையேனும் துப்பாக்கிக் குண்டு தாக்கியிருந்தால், அதை நிரூபிக்கவும். ஆனால் இளைஞர்களால் வன்முறை ஏற்பட்டபோது நான்கு பேர் மட்டுமே கால்களில் தாக்கப்பட்டனர், யாருக்கும் பலத்த காயங்கள் எதுவும் ஏற்படவில்லை” என்று அவர் கூறினார்.

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!

காஷ்மீர் வதை முகாமாக மாற்றப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகிறார்களே என்ற கேள்விக்கு பதிலளித்த ஆளுநர், படித்திருந்த போதும் வதை முகாம் என்பதன் பொருள் அவர்களுக்குத் தெரியாது என்றார்.

“அது என்னவென்று எனக்குத் தெரியும். நான் 30 முறை சிறைக்குச் சென்றிருக்கிறேன். அப்படியிருந்தும், நான் அதை ஒரு வதை முகாம் என்று சொல்ல மாட்டேன். காங்கிரஸ் அவசர காலங்களில் மக்களை ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைத்தனர், ஆனால் யாரும் அவர்களை அதனைச் சொல்லி வதை முகாம்கள் என்று அழைக்கவில்லை. தடுப்புக் காவல் ஒரு வதை முகாமுக்கு சமமா” என்று கேள்வி எழுப்பினார் சத்யபால் மாலிக்!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img