உளுந்தங்களி
தேவையான பொருட்கள்:
உளுந்து – 300g
பச்சரிசி மாவு -2tbs
நெய் – 2tbs
பட்டை -1piece
கிராம்பு -2
ஏலக்காய் -2
முந்திரி -10
துருவிய தேங்காய் -3tbs
தேங்காய் பால் -600ml
சீனி (தேவைக்கு)
செய்முறை:
முதலில் ஒரு கடாயில் உளுந்தைப் பொன் நிறமாக வறுத்து எடுக்கவும்.
பிறகு சூடு தனிந்ததும், வறுத்த உளுந்தை மிக்ஷியில் நன்கு பொடி செய்யவும்.
பொடி செய்த உளுந்துடன் பச்சரிசி மாவை கலந்து வைக்கவும்.
Step-2
ஒரு கடாயில் நெய் ஊற்றி, சூடானதும் பட்டை, கிராம்பு சேர்க்கவும். பின்பு ஏலக்காய் இடித்து சேர்க்கவும். பிறகு முந்திரி சேர்த்து பொன் நிறமாக வறுக்கவும். அதன் பிறகு துருவிய தேங்காய்ப்பூ சேர்க்கவும். தேங்காய்ப்பூ லேசாக வதங்கியப்பிறகு தேங்காய்ப்பால் மற்றும் சீனி சேர்த்து கொதிக்க விடவும். தேங்காய்ப்பால் கொதி வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து, பொடி செய்த உளுந்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, கலவையை கைவிடாமல் நன்கு கிண்டவும். கலவை, கேசரி போன்ற பதத்தில் கெட்டியானதும், ஒரு தே.கரண்டி நெய் விட்டு அடுப்பை அணைக்கவும். சுவையான காயல் ஸ்பெசல் உளுந்தங்களி தயார்.
சமைக்கும் நேரம்: 15நிமிடம்
பரிமாறும் அளவு: நான்கு நபர்கள்
டிப்ஸ்:
உளுந்தை முன்பாகவே வறுத்து பொடி செய்து ஏர் டைட் டப்பாவில் அடைத்து வைத்தால், தேவைப்படும் போது உடனடியாக ஐந்தே நிமிடத்தில் உளுந்தங்களி தயார் செய்து விடலாம்



