இவர்கள் பாடினால் …
எடப்பாடி பழனிச்சாமி – யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க…. பன்னீர் செல்வம் – ஆறு மனமே ஆறு அம்மாவின் கட்டளை ஆறு…. தினகரன்/புகழேந்தி/வெற்றிவேல் – ஆட்டம் என்ன சொல்லு நீ…. ஆடிடுவோம் கொஞ்ச நாழி… I will dance for you….. சசிகலா – பச்சை மரம் (பணம்) ஒன்னு…. அள்ளித்தந்த அக்கா சொல்லித்தந்த கணவன்……
கருணாநிதி: “கடவுள் ஏன் கல்லானான்… மனம் கல்லாய்ப் போன மனிதர்களாலே”
ஸ்டாலின்: “சிலர் சிரிப்பார்.. சிலர் அழுவார்.. நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன் புலம்புகிறேன்….
விஜயகாந்த்: “காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி! பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி”
வைகோ: “உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா”
வாசன்: “வாசமில்லா மலரிது, வசந்தத்தைத் தேடுது”
கம்யூனிஸ்டு தலைவர்கள்: “வானத்தைப் பார்த்தேன், பூமிய பார்த்தேன்.. மனுஷனை இன்னும் பார்க்கலியே”
திருமாவளவன்: “அம்மம்மா.. தம்பி என்று நம்பி.. அவன் ‘என்னை’ வளர்த்தான்”
ராமதாஸ் & அன்புமணி ராமதாஸ்: “எங்களுக்கும் காலம் வரும்! காலம் வந்தால் வாழ்வு வரும்! வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே”
தமிழிசை செளந்தர்ராஜன்: “யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்”
சீமான்: “தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா” அமித்ஷா – யாரை எங்கே வைப்பது என்று எனக்குத் தெரியல, அட அண்டங்காக்காய்க்கும் குயில்களுக்கும் பேதம் புரியல…
மக்கள்: “நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன்… சிரிப்பு வல்லே! நான் அழுகிறேன் அழுகிறேன்… அழுகை வல்லே”
- சமூக வலைத்தள உலாவில் சுட்டவை…




