சந்திரயான்-2 அனுப்பிய நிலவின் 2வது படம் வெளியீடு..!

சற்றுமுன் தொழில்நுட்பம் லைஃப் ஸ்டைல்
chandrayaan 2 - 2026

நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி நிறுவனம் இஸ்ரோவின் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து சந்திராயன் 2 விண்கலம் கடந்த மாதம் அனுப்பப் பட்டது.

இந்நிலையில், ஆகஸ்ட் 3 ஆம் தேதி பூமியை படம் எடுத்து இஸ்ரோவின் தரைக் கட்டுப்பாட்டு மையத்திற்கு சந்திரயான் 2 அனுப்பியது. இதனை இஸ்ரோ வெளியிட்டது.

தற்போது சந்திரயான் 2 எடுத்துள்ள 2வது புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவின் தரைப் பரப்பில் இருந்து 4,375 கி.மீ., தொலைவில் இருந்து நிலவின் மேற்பரப்பை ஆக.23 ஆம் தேதி இது படம் எடுத்துள்ளது.

இந்த இரண்டாவது படத்தை இஸ்ரோ இன்று வெளியிட்டது. நிலவின் மேற்பரப்பில், பல பள்ளங்கள் தெரிகின்றன. விண்கற்கள் அல்லது வேற்று கிரக பொருட்கள் அல்லது செயற்கைக்கோள்கள் செயலிழந்து நிலவின் மீது விழும்போது அதன் பாதிப்பு என பல்வேறு காரணங்கள் இதற்கு அலசப் படுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.