வரலாறு சாதனை வெற்றி பெறுவோம்: சூளுரைத்த ஓபிஎஸ் ஈபிஎஸ் இரட்டையர்

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் திருச்சி

எம்ஜிஆர்- ஜெயலலிதாவின் ஆசியோடு ஆர்.கே.நகர் தேர்தலில் வரலாற்று வெற்றிபெறுவோம்  என தஞ்சை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.

தஞ்சாவூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது வரலாற்று சிறப்பு வெற்றி பெறுவோம் என்றார்.

இந்த விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மணல் குவாரிகளை மூடும் நீதிமன்ற தீர்ப்பினால் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது .

ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மணல் கிடைக்க அரசே மணல் குவாரிகளை ஏற்று நடத்தியது. முறைகேடு இல்லாமல் அரசு மணல் விற்பனை செய்தது என்றார்.

மேலும் ரூ 233.07 கோடி நிலுவையிலுள்ள விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம், பயிர் காப்பீட்டு தொகையை தமிழக அரசு பெற்று தந்துள்ளது என்றார்.

காவிரி விவகாரத்தில் விரைவில் நமக்கு சாதகமான நிரந்தர தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறோம் என்று பேசினார் முதலமைச்சர் பழனிசாமி.

பின்னர் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்,  அதிமுக ஒன்றிணைந்து இருக்க வேண்டும் என்பதுதான் தமிழக மக்கள் மற்றும் தொண்டர்களின் விருப்பம் என்றார்.

மேலும் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் உருவான அதிமுக இன்னும் நூறு ஆண்டுகள் நிலைத்திருக்கும்; தமிழகத்தை ஆட்சி செய்யும் அதிமுக ஒரு துரும்பும் அகலாதவாறு ஆர்கே நகரில் வெற்றிபெறும் என்றார் உறுதியாக.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.