தொழில் முதலீடுகளை ஈர்க்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 28ம் தேதி இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும் பிற முதலீட்டார்களிடம் இருந்து முதலீடுகளை பெற தமிழக முதலமைச்சர் பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
28ம் தேதி காலை சென்னையில் இருந்து புறப்படும் முதலமைச்சர் பழனிசாமி முதலில் லண்டன் செல்கிறார். செப்டம்பர் 1-ஆம்தேதி இங்கிலாந்தில் இருந்து புறப்பட்டு 2-ஆம் தேதி நியூயார்க் செல்கிறார். அமெரிக்காவின் கலிபோர்னியா கால்நடை பண்ணையை சேலம் தலைவாசல் கால்நடைப்பூங்காவிற்கு தேவையான தொழில்நுட்பங்களை அறிய பார்வையிடுகிறார்.

அமெரிக்காவில் இருந்து திரும்பும் வழியில் செப்டம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் துபாயில் தொழில் முனைவோர் ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் சுற்றுப்பயணங்களை நிறைவு செய்துவிட்டு செப்டம்பர் 10ந் தேதி சென்னை திரும்புகிறார்.



