தமிழக தலைமை செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

Published:

சென்னை:
தமிழக தலைமை செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

நாட்டில் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததையடுத்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள அந்த ரூபாய் நோட்டுக்களை வங்கியில் டெபாசிட் செய்து வருகின்றனர். அதேசமயம், கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணத்தை பதுக்கி வைத்திருக்கும் நபர்கள், முறைகேடான வகையில் பணத்தை புதிய நோட்டுக்களாக மாற்றுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி கட்டுக்கட்டாக பணத்தை கைப்பற்றி வருகின்றனர். இதில் புதிய ரூபாய் நோட்டுக்கள் மட்டுமின்றி பழைய நோட்டுக்களும் சிக்குகின்றன.

தமிழகத்திலும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சென்னையில் தொழிலபதிபர் சேகர் ரெட்டியின் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள், ரூ.100 கோடிக்கும் அதிகமான பணத்தை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்திவருகின்றனர். சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டிலும், அவரது மகன் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், ராம மோகன ராவுக்கு நெருக்கமான தொழிலதிபர்களின் வீடுகள் உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராம மோகன ராவ், ஆந்திர பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர். தமிழக வேளாண்மைத்துறை, சமூக நலம், தொழில் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் பணியாற்றியிருக்கிறார்.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img