சென்னையில் மோடி: தமிழில் டிவிட்டரில் பதிவிட்டு மகிழ்ச்சி!

சற்றுமுன் சென்னை தமிழகம்

சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில், சீன அதிபருடனான பேச்சுவார்த்தைகளுக்காக, சென்னையில் வந்திறங்கினார் பிரதமர் மோடி. இதை அடுத்து, தனது மகிழ்ச்சியை டிவிட்டரில் தமிழில் பதிவிட்டு வெளிப்படுத்தியுள்ளார்.

அவரை விமான நிலையத்துக்குச் சென்று , முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர், அமைச்சர்களுடன் சென்று வரவேற்றனர். மேலும் ஆளுநர் புரோஹித் உடன் சென்று பிரதமரை வரவேற்றார்.

modi received chennai1 - 2026

பின்னர் தமது டிவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளவை…

சென்னை வந்திறங்கியுள்ளேன். கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழ் நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா -சீனா இடையேயான உறவு இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும். .. என்று தமிழில் பதிவிட்டிருந்தார்.

மேலும், தாம் சென்னையில் வந்திறங்கிய செய்தியைத் தெரிவிக்கும் வகையில், சீன மொழியிலும் டிவிட்டர் பதிவில் வெளிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.