
தனது இந்த இந்திய பயணம் மறக்க முடியாதது என்று சீன அதிபர் கூறியதாக இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் விஜய் கோகலே குறிப்பிட்டுள்ளார்.
மாமல்லபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் வெளியுறவுத் துறை செயலர் விஜய் கோகலே. அப்போது அவர் கூறியவை…
தமது இந்த பயணம் மறக்க முடியாததாக இருந்தது என்று சீன அதிபர் குறிப்பிட்டார். தமிழக அரசுக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் பாராட்டு தெரிவித்தார். இந்தியா – சீனா இடையேயான முறைசாரா சந்திப்புகள் தொடர சீன அதிபர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
வர்த்தக பற்றாக்குறையை விவாதிக்க உயர்மட்டக்குழு அமைக்கப்படும். உற்பத்தித் துறையில் கூட்டுறவை மேம்படுத்த உயர்மட்டக்குழு ஆலோசிப்பார்கள். குழுவில் சீன துணை அதிபர், இந்திய நிதியமைச்சர் இருப்பர்.
இரு நாடுகள் இடையேயான ராஜதந்திர தொடர்புகளை மேலும் அதிகரிக்க இரு நாட்டு தலைவர்களும் ஒப்புதல் தெரிவித்துள்ளனர் என்று கூறிய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே, தமிழகம் சிறப்பான வரவேற்பை அளித்துள்ளது என்று கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் வரை அனைத்தும் மிக சிறப்பாக இருந்ததாக சீன அதிபர் தெரிவித்தார்; அரசின் ஏற்பாடுகள் மிக சிறப்பாக இருந்ததாக மனதார பாராட்டினார் என்று தெரிவித்த வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே, இந்தியா, சீனா இடையே உள்ள தேசிய அளவிலான பிரச்னைகள், சீனா மாமல்லபுரம் இடையே இருந்த வர்த்தக தொடர்பு குறித்தும் பேசப்பட்டது என்றார்.
இரு நாடுகளிடையே நிலவும் பிரச்னைகள் தொடர்பாகவும், அதனை சரி செய்வது தொடர்பாகவும் விரிவாக பேசப்பட்டது என்றும், வர்த்தகம், பொருளாதாரம், முதலீடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது என்றும் கூறினார் வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே!
- விநாயகர் சதுர்த்தி நேரத்தில் இடைத்தேர்தல்; மாற்றி அறிவிக்க இந்து முன்னணி கோரிக்கை!
- மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: முன்னேற்பாடுகள் தீவிரம்!
- தொடரும் தெய்வத்திருமேனிகள் திருட்டு; இந்து முன்னணி கண்டனம்!
- செல்போனுக்குத் தடை; கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தண்டனையா?
- ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை; போதை, கொலை, குற்றங்கள் குறித்து மக்கள் கவலை!
- போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்! மனதின் குரலில் பிரதமர்!

