ஸ்ரீவைகுண்டத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி!

சற்றுமுன் பொது தகவல்கள்
win - 2026

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் 9-வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 3,537 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், 1,129 பதவிகளுக்கான பிரதிநிதிகள் போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டனர். 7 பதவிகளுக்கு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாததால் தேர்தல் நடைபெறவில்லை. இந்த 1,136 பதவிகளைத் தவிர 2,401 பதவிகளுக்கு டிசம்பர் 27, 30 ஆகிய நாட்களில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

அதிமுக வேட்பாளர் சுந்தரி -1152 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மணி செல்வி 1511 வாக்குகள் பெற்றார். ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சுந்தரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.