
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதை அடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,256 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரேநாளில் 1,072 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. இதை அடுத்து, சென்னையில் இதுவரை கொரோனா மொத்த பாதிப்பு 18,670 ஆக அதிகரித்துள்ளது.
இன்று தமிழகத்தில் மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து, கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 220 ஆக உயர்ந்துள்ளது.
அதே நேரம், தமிழகத்தில் ஒரே நாளில் 585 பேர் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டுள்ளனர். இதுவரை 14,901 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சென்னையில் இன்று 1072 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 169 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 44 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப் பட்டது.


