தமிழகத்தில் 1,875 பேருக்கு தொற்று; சென்னையில் 1,407 பேருக்கு கொரோனா!

Published:

coronavirus
coronavirus
  • தமிழகத்தில் ஒரே நாளில் 1,875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 38,716ஆக உயர்ந்துள்ளது.
  • சென்னையில் இன்று ஒரே நாளில் 1,407 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
  • தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,372 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் 349 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 6 நாட்களில் 117 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38,716 ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 349 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் இன்று 1,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 38 பேர் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். மொத்த பாதிப்பு 38,716 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 16,829 மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இதுவரை தமிழகத்தில் 6,55,675 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்று சென்னையில் 19 பேரும், செங்கல்பட்டில் 2 பேரும், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தில் தலா ஒருவரும் என மொத்தம் 23 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 349 ஆக அதிகரித்துள்ளது.

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

இன்று 1,372 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 20,705 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 17,659 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இதுவரை இல்லாத அளவாக 1,407 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து, சென்னையில் மட்டும் 27,398 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையை அடுத்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் 127 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 72 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 19 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

covidjun
covidjun

Related articles

Recent articles

spot_img