டிவி., செய்தி சேனல் அநாகரிக விவாதம்: எஸ்.வி.சேகருக்கு சுப.வீ.,யின் கேள்விகளும் பதிலடிகளும்!

sekar subhavee - 2026

சென்னை:

டிவி செய்தி சேனலில் நடைபெற்ற அநாகரிக விவாதம் தொடர்பாக பாஜக.,வின் எஸ்.வி.சேகர் ஒரு வீடியோ பதிவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அவரது பதிவுக்கு திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேரா. சுப வீரபாண்டியன் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அவர் முன்வைத்துள்ள கேள்விகள்:

திரு எஸ்.வி.சேகர் அவர்களுக்கு, வணக்கம்.
நேற்று வெளியான உங்களின் 11 நிமிடக் காணொளியைக் கண்டேன். அதுகுறித்துச் சில செய்திகளை உங்களோடு பேசுவதற்காகவே இந்த மடல். ஊர் அறிய வேண்டும் என்பதற்காக இதனைத் திறந்த மடலாக வெளியிடுகின்றேன்.

நியூஸ் 7 தொலைக்காட்சியில் நண்பர்கள் நாராயணன், மதிமாறன் இருவருக்குமிடையே சில நாள்களுக்கு முன் நடைபெற்ற உரையாடலின் அடிப்படையில் உங்கள் காணொளி அமைந்துள்ளது. அந்த தொலைக்காட்சி நிகழ்வை நானும் பார்த்தேன்.

  1. நீங்களும் நானும் அடிப்படையில் முற்றிலும் நேர் எதிரான கொள்கைகளைக் கொண்டவர்கள் என்பது வெளிப்படை. மீண்டும் அதனை உங்கள் காணொளி உறுதிப்படுத்தியுள்ளது. “சாதியும் மதமும் நமக்குத் தாய், தந்தை போல” என்று கூறியுள்ளதோடு, “ஒவ்வொருத்தரும் தங்கள் சாதியை ஒசத்திப் பேசுங்க. அதிலே தப்பில்ல” என்றும் நீங்கள் காணொளியில் குறிப்பிட்டுள்ளீர்கள். எங்களை இழிவுபடுத்தும் சாதி உங்களுக்குத் தாய் போலத் தெரிகிறது. சாதி தாய் என்றால், ‘சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொன்ன பாரதி பற்றிய உங்கள் பார்வை என்ன? சாதியைக் காப்பாறுவதுதான் உங்கள் நோக்கம் என்பதை நாங்கள் அறிவோம். சாதி அமைப்பு இருந்தால்தானே, சிலர் மேலும், பலர் கீழுமாக இந்தச் சமூகத்தில் வாழ முடியும்! ஆனால் சாதியை ஒழிக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். எனவே நாம் இருவரும் ஒரு புள்ளியில் சந்திக்க வாய்ப்பே இல்லை.

  2. “எந்தப் பார்ப்பனர் மீதாவது ஒரு எப்.ஐ.ஆர். உள்ளதா என்று கேட்கிறீர்கள். இந்திய ராணுவ ரகசியங்களை வெளிநாட்டிற்கு விற்ற கூமர் நாராயணன் யார் சேகர்? அது பழைய கதை என்பீர்கள். சங்கரராமன் கொலைவழக்கில் ஒரு பார்ப்பனர் மீதன்று, பல பார்ப்பனர்கள் மீது எப்.ஐ.ஆர். போடப்பட்டதே? வழக்கும் நடந்ததே. அவர்கள் விடுதலையாகி விட்டனர் என்பீர்கள்! ஜெயலலிதா மீது வழக்குத் தொடுக்கப்பட்டு, உச்ச நீதிமன்றம் தண்டனையும் வழங்கியுள்ளதே, அது கூடவா உங்களுக்கு மறந்து போய்விட்டது?

  3. 99.9% மதிப்பெண் வாங்கினால் கூட, பார்ப்பன மாணவர்களுக்கு, படிப்பதற்கு இடம் கிடைப்பதில்லை என்று கூறியுள்ளீர்கள். அப்படியானால், இன்று பள்ளி, கல்லூரிகளில் படித்துக் கொண்டுள்ள பார்ப்பன மாணவர்கள் அனைவரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர்களா? பொய்யைக் கூட உங்களால் பொருந்தச் சொல்ல முடியவில்லையே?

  4. நண்பர் மதிமாறன், மதியில்லாதவர், குறுக்குப்புத்திக்காரர் என்றெல்லாம் வசைபாடும் நீங்கள், அடுத்தவரை வெறுக்காமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு அறிவுரை வேறு கூறுகின்றீர்கள். மதிமாறனின் புத்திக் கூர்மையான வினாக்களுக்கு விடை சொல்ல முடியாமல் தடுமாறிய ‘பிரபலங்களைத்’ தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் நாங்களும் பார்த்துள்ளோம். அது போகட்டும், அவர் அடுத்த சாதியினரை அசிங்கமாகப் பேசினார், பார்ப்பனர்களைத் திட்டினார் என்று பொத்தாம் பொதுவாகவே கடைசி வரையில் பேசியுள்ளீர்களே தவிர, அப்படி என்ன பேசினார் என்று எந்த இடத்திலும் கூறவே இல்லையே ஏன்? அங்குதான், சான்று இல்லாமல் பழி தூற்றும் உங்கள் தந்திரம் இருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். அந்த விவாதத்தில் நாராயணன் அவ்வளவு அமைதியாகவா பேசினார்? எவ்வளவு இரைச்சல்! அடுத்தவரைப் பேச விடாமல் தடுக்கின்ற ஆர்ப்பாட்டம்! யோகா செய்தால் மன அமைதி வரும், நிதானம் வரும் என்றெல்லாம் சொல்கின்றீர்கள், நண்பர் நாராயணன் யோகா செய்வதே இல்லையா? அன்று மதிமாறன் என்ன கேட்டார்? யோகா நல்லது என்கின்றீர்களே, சுன்னத் செய்வதும் நல்லது என்றுதான் மருத்துவ அறிவியல் சொல்கிறது. அதற்காக அனைவரும் சுன்னத் செய்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா என்று கேட்டார். அறிவார்ந்த இந்தக் கேள்வி உங்களைக் கோபப்படுத்தத்தான் செய்யும்.

  5. திமுக செயல் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியும், பாராட்டும் சொல்லியுள்ளீர்களே, அங்குதான் உங்களின் மூளை அபாரமாக வேலை செய்துள்ளது. மக்கள் செல்வாக்கு உள்ள ஒருவரை நேரடியாகப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதில்தான் எத்தனை கவனம். ஸ்டாலின் அவர்கள் மீதும் , திராவிட இயக்கத்தின் மீதும் உங்களுக்கெல்லாம் எவ்வளவு அடங்காச் சினம் உண்டு என்பது எங்களுக்குத் தெரியாதா? சில நாள்களுக்கு முன்பு கூட, ரஜினி, அஜித், விஜய் மூவரும் சேர்ந்து கட்சி தொடங்க வேண்டும் என்று பேட்டி கொடுத்தீர்கள், அதன் உட்பொருள் என்ன? என்ன செய்தாவது திமுக ஆட்சிக்கு வருவதைத் தடுத்துவிட வேண்டும் என்பதுதானே! செயல் தலைவர் மீது இவ்வளவு கோபத்தை உள்வைத்துக் கொண்டு, வெளியில் நன்றியும், பாராட்டும் சொல்கின்றீர்களே, தேர்ந்த நடிகர்தான் நீங்கள்! செயல் தலைவர் தளபதி அவர்களையும், ஆசிரியர் வீரமணி அவர்களையும், என்னையும், தம்பி மதிமாறனையும் வெட்டிப் போட்டு விட்டால், உங்களின் கோபம் தீர்ந்துவிடுமா? அப்போது கூட எங்களை வெட்டுவதற்கு, அறியாமையிலும், வறுமையிலும் உள்ள எங்கள் சகோதரன் ஒருவனிடம்தான் அரிவாளைக் கொடுத்து விடுவீர்கள். நீங்கள் வெட்டினால், உங்கள் மீது எப்.ஐ.ஆர் வந்துவிடுமே!

இப்போதும்
அன்புடன்
சுப. வீரபாண்டியன்
– என்று சுப.வீரபாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே சுப.வீரபாண்டியனின் இந்தக் கேள்விகளுக்கு சமூக வலைத்தளங்களில் பதில் கருத்துகளும் வரத் தொடங்கியுள்ளன. எஸ்.வீ.சேகர் ஒவ்வொரு சாதியையும் அவரவர் உயர்த்திப் பேசிக் கொள்ளுங்கள் என்றுதான் சொன்னார், அடுத்த சாதியை மட்டம் தட்டாதீர்கள் என்று கூறினார். எல்லோரும் உயர்ந்த சாதி எனும் நம்பிக்கையுடன் செயல்பட்டால் எல்லோருமே உயர்ந்த நிலைக்கு இருப்பார்கள், ஏன் கீழ் நிலைஎன்று எண்ணப்போகிறார்கள் என்று சேகர் நினைக்கலாம். ஆனால் சுப.வீ. போன்றவர்கள் மட்டந்தட்டிப் பேசி சமூக நல்லிணக்கத்தைக் கெடுப்பதாகவும், பதற்றத்தை உருவாக்குவதாகவும்தான் செயல்படுகிறார்கள்; சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொன்ன பாரதியையும் பார்ப்பன அடையாளமிட்டு காழ்ப்பு உணர்ச்சியை விதைப்பவர்கள்தான் சுபவீ போன்றவர்கள் என்று சிலர் கருத்து வெளியிட்டனர். சுப.வீ.யும் எஸ்.வீ.சேகரும் ஏன் ஒரு புள்ளியில் சந்திக்க வேண்டும்? அப்படி சேகர் ஏதும் சொன்னாரா? அல்லது அப்படி ஒரு புள்ளியில் சந்திக்க வேண்டும் என்று எஸ்.வீ.சேகர் விரும்பினாரா என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

சங்கரராமன் கொலை வழக்கில், காஞ்சிபுரத்தில் முற்றுகையிடுவோம் என்று கருணாநிதியும் திகவினரும் மிரட்டி, ஜெயலலிதா மூலமாக ஒரு பொய்யான வழக்கைப் போட கூட்டணி நாடகம் நடந்தது என்றும், இப்படி ஜோடிக்கப்பட்ட வழக்கு போடப்பட்டதால்தான் பார்ப்பனர்கள் தமிழகத்தில் தங்கள் பாதுகாப்பின்மையை உணர்கிறார்கள் என்றும் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர். ஜெயலலிதா விவகாரத்தில், அவர் பார்ப்பனர் என்பதை எவரும் முன்னிறுத்த வில்லை என்றும், அவர் சார்ந்த திராவிடக் கழகங்களைத்தான் முன்னிறுத்தினார்கள் என்றும், ஜெயலலிதா காலமான பின்னர், இத்தனைக்கும் காரணமாக அமைந்து பின்னணியில் இயங்கியது பார்ப்பன ஜெயலலிதா அல்ல, அது ஒரு திருடர் குடும்பம் என்றும், சேருவார் சரியில்லாமல் சேர்ந்த பாவத்தை பார்ப்பன செயலலிதா அனுபவிக்க நேர்ந்தது என்றும் சமூக வலைத்தளங்களில் பரவலாக கருத்துகள் எழுந்துள்ளன.

பள்ளி கல்லூரிகளில் படித்து வரும் பார்ப்பன மாணவர்கள், 99 சதவீதம் எடுத்தாலும் மேல்படிப்புக்கு எத்தகைய சிரமத்தை அனுபவிக்கின்றனர் என்பதைத்தான் சேகர் குறிப்பிட்டாரே அன்றி, பள்ளிகளில் படிப்பதற்கு அல்ல என்பதை பேராசிரியராக இருந்த சுப.வீ., ஒரு கல்வியாளராகப் புரிந்து கொண்டுதான் பேசுகிறாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

யோகா என்பதைப் பற்றிப் பேசப் போகின்றபோது, யோகா என்பதை பார்ப்பனர்கள் மட்டுமே கண்டுபிடித்து திணித்தார்கள் என்று இல்லாதபோது, அதில் பார்ப்பனீயம் சாதீயம் எல்லாம் எங்கே வந்தது என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல், குறிப்பிட்ட சாதியை மட்டுமே வாயில் வந்த படி பேசும் அறிவு நிலைக்கு சாதி ஒழிப்பு கருத்தாளர்களுக்கு எந்த அடிப்படையில் பதிலடி கொடுப்பது என்றும், அதில் நாராயணன் செய்தது சரியே என்றும் வாதிடுகிறார்கள் சமூக வலைத்தளங்களில்.

அரசியல் இயக்க ரீதியாக தொடர்பில் உள்ளவர் எனும் வகையிலும், தனிப்பட்ட வகையில் நண்பர் எனும் வகையிலும் ஒரு பொதுக்கருத்தை முன்வைத்து மு.க.ஸ்டாலினிடம் எஸ்.வி.சேகர் பேசியிருக்கிறார்; சாதாரண எந்தப் பார்ப்பனரும் ஸ்டாலினுக்கு போன் செய்து பேசவில்லை! அப்படியே ஓட்டு கேட்க வரும் ஒரு கட்சியிடம் ஒரு சமுதாயம் சார்பில் பேசுவது தவறு என்றால், ஒரு சமுதாயத்தை இழித்தும் பழித்தும் பேசும் திக., தலைவர் வீரமணியோ சுப.வீ.யோகூடத்தான் ஒவ்வொரு முறையும் தவறு செய்கிறார்கள் என்று விவாதித்து வருகின்றனர். மேலும், வெட்டு குத்து கொலை என்று பார்ப்பனரை வஞ்சம் வைத்துத் தீர்ப்பதற்கும், அவர்கள் மீது எப்.ஐ.ஆர். போடப் படுவதற்கும், பார்ப்பனர்களை வழக்குகளில் சிக்க வைக்க சுப.வீ. போன்றவர்கள் திட்டமிட்டு சமூகத்தில் கூலிப்படைகளை முன்வைத்து செயல்படுத்தி வருகிறார்களோ எனும் அச்சத்தை அவரது கருத்து காட்டுகிறது என்றும் கருத்துகள் முன்வைக்கப் படுகின்றன.

இந்தப் பிரச்னையை இருவர் தொடர்பான பிரச்னையாக பார்க்கக் கூடாது என்றும், செய்திசேனல் விவாதங்களில் சாதி, மத, இன அடையாளங்களோ, தனி நபர் காழ்ப்புணர்வோ இன்றி அணுக வேண்டும் என்றும் பரவலாக கருத்துகள் எழுந்துள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories