தமிழகத்தில் இன்று 3,940 பேருக்கு கொரோனா உறுதி; சென்னையில் 1,992 பேருக்கு தொற்று!

Published:

corona virus
corona virus

தமிழகத்தில் இன்று 3940 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதுவரை இல்லாத அளவாக 3940 பேருக்கு கொரோனா உறுதியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 4ஆவது நாளாக ஒரே நாள் பாதிப்பு 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மொத்த பாதிப்பும் 82 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 

சென்னையில் மட்டும் இன்று 1992 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 54 பேர் உயிரிழந்தனர்.  அதேநேரம் இன்று ஒரே நாளில் 1443 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் 

இன்றைய பாதிப்பு எண்ணிக்கையை அடுத்து  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 82,275ஆக  உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 53,762ஆக உயர்வு கண்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1,079ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 45,537ஆக உயர்ந்துள்ளது. 

இன்று ஒரே நாளில் 32,948 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப் பட்டுள்ளன.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

மதுரையில் இதுவரை இல்லாத அளவாக 284 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது சென்னையை அடுத்து சென்னையை ஒட்டிய மாவட்டங்களான 

செங்கல்பட்டு மாவட்டத்தில்183 பேருக்கு இன்று கொரோனா உறுதி  செய்யப்பட்டது அடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் 92 பேருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் 99 பேருக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டது

covid jun a
covid jun a
covid jun b
covid jun b
covid jun c
covid jun c

Related articles

Recent articles

spot_img