வா வா என சாக கூப்பிட்ட பேய்.. கடிதம் எழுதி மாணவி தற்கொலை!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
lathika

“அந்த பேய் என்னை சாக கூப்பிடுதுப்பா.. போய்ட்டு வரேன்.” என்று லட்டர் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சத்திரப்பட்டி கிராமத்தில் வசிப்பவர் கோபி. கூலி தொழிலாளியான இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகளான லத்திகா என்பவர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நர்சிங் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். தற்போது கொரோனா காரணமாக விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளார்.

அந்த பிறந்த நாளை வீட்டில் உள்ளவர்கள் நல்ல முறையில் கொண்டாடினார்கள்.. லத்திகாவும் மகிழ்ச்சியாகவே இருந்துள்ளார். அதற்கு பிறகுதான் வீட்டில் உள்ள யாரிடமும் சரியாக பேசவில்லையாம்.

எத்தனையோ முறை கேட்டு பார்த்தும், எந்த பதிலையும் லத்திகா சொல்லவில்லை.. இந்நிலையில், இவர் தன்னுடைய ரூமில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகளின் சடலத்தை கண்டு பெற்றோர் கதறி துடித்தனர்.

தகவலறிந்து போலீசார் விரைந்து வந்தனர். சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் அனுப்பி விசாரணையையும் ஆரம்பித்தனர். விசாரணையில் அவரது அறையில் ஒரு கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில் லத்திகா பென்சில் மூலமாக தனது தற்கொலைக்கு காரணம் பேய் என்று எழுதியிருந்தார்.

அதில், ”அப்பா. அம்மா யாரோ என்னை பயமுறுத்திட்டே இருக்காங்க.. நைட் நேரத்துல தூக்கம் வர்றது இல்லை. நைட் முழுக்க என்னை சாகறதுக்கு வா, வா-ன்னு கூப்பிடறாங்க… இதை வெளியில் யார்கிட்டயாவது சொன்னா எல்லாரையும் கொன்னுடுவேன்னு அந்த பேய் சொல்லுது.. தினமும் என்னை சாக கூப்பிட்டுட்டே இருக்கு. என்னை ஏதாவது பண்ண சொல்லுதுப்பா. இல்லைனா நம்ம குடும்பத்தை அழிச்சிடுவேன்னு சொல்லுது.

யாரோ உங்களை வசியம் பண்ணனும்னு நினைக்கிறாங்க. அதனால என் பொருள், நான் பயன்படுத்திய பொருள் எதையும் வீட்டில் தயவு செய்து வைக்காதீங்க. எல்லாம் நல்லதுக்கு. தம்பி, தங்கச்சி, நீங்க 2 பேரும் அப்பா அம்மாவை நல்லா பாத்துக்கங்க… லவ் யூ மை ஃபேமிலி,” என எழுதி வைத்துள்ளார்.

இக்கடிதத்தை கைப்பற்றிய போலீசார் கடிதத்தில் எழுதி இருப்பதின் உண்மை தன்மை குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் லத்திகா பயன்படுத்திய செல்போனை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.