அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து!

சற்றுமுன் தமிழகம்
fire-in-hospital

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறை வீரர் ஒருவருக்கு மருந்து குடோவுனில் இருந்து வெளியான நச்சுப்புகை தாக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது.

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் உள் நோயாளிகள் பிரிவு அருகே உள்ள மருந்து குடோவுனில் வெள்ளிக்கிழமை காலை தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தேனி மற்றும் ஆண்டிபட்டி தீயணைப்புத்துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

fire-in-hospital-1

இந்த விபத்தில் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறை வீரர் ஒருவருக்கு மருந்து குடோவுனில் இருந்து வெளியான நச்சுப்புகை தாக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து அவரை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மேலும், நச்சுப்புகையால் உள்நோயாளிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, உள்நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். நோயாளிகள் அனைவரும் மருத்துவமனை வளாகத்தில் வரிசையாக அமர வைக்கப்பட்டனர். தீ விபத்து ஏற்பட்ட குடோவுன் அருகே கொரோனா நோயாளிகள் வார்டு மற்றும் ரத்த வங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த தீவிபத்து எப்படி ஏற்பட்டது என காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.