edappadi
edappadi

மாநகராட்சிகளில் ஆக. 10 முதல் சிறிய வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி அளிக்கப் படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

சென்னை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் உள்ள 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ள சிறிய வழிபாட்டு தலங்கள் வரும் 10ஆம் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப் படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும், தமிழகம் முழுவதும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளை திறப்பதற்கும் அனுமதி அளிக்கப் படுவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையரிடமும், மற்ற மாவட்டங்களில் ஆட்சியரிடமும் அனுமதி பெற வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending