மச்சினிச்சியை கல்யாணம் செய்ய விருப்பம்! மனமுடைந்த மனைவி, எடுத்த விபரீத முடிவு!

Published:

marriage

தங்கையை இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற கணவன் மீது புகார் அளிக்க சென்ற மனைவியை காவலர் ஒருவர் மிரட்டியுள்ளார். இதனால் வேதனையில் மனைவி தூக்குப் போட்டு உயிரை மாய்க்க முயன்றுள்ள சம்பவம் ஆம்பூரில் நடந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை பெரியாங்குப்பம் காந்திநகர் பகுதியில் வசித்து வரும் சங்கர் என்பவரின் மங்கை(17), நங்கை என்ற மகள்கள் உள்ளனர். (பெயர்கள் மாற்றம்). நங்கையை ஆலங்காயம் பெத்தூரை சேர்ந்த சாந்தகுமாருக்கு திருமணம் செய்துள்ளார். இதனிடையே, மனைவியின் சகோதரி மங்கையை இரண்டாவது திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார் சாந்தகுமார். அதற்கான ஏற்பாடுகளிலும் இறங்கியுள்ளார்.

இந்த நிலையில், தங்கையை இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற சாந்தகுமார் மீது நகர காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் மணிகண்டன் என்பவரிடம் புகார் அளித்துள்ளார் நங்கை.

ஆனால், காவலர் மணிகண்டன், சாந்தகுமாரை கைது செய்யாமல் அவரது மனைவியை மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த நங்கை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்திரை, நங்கையை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நங்கைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த மகளிர் காவல்துறையினர், காவலர் மணிகண்டன் மீது ஆம்பூர் கிராம காவல் நிலையத்தில் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

Related articles

Recent articles

spot_img