உரிமையாளரைத் தாக்கி நிலத்தைப் பறிக்க முயற்சி: ஆட்சியரகம் முன் குடும்பம் தர்ணா!

சற்றுமுன் தமிழகம் மதுரை
uslimapatti-balamurugan-kero
uslimapatti-balamurugan-kero

நிலத்தின் உரிமையாளர்களை தாக்கி -நிலத்தை அபகரிக்க முயல்வதாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப் பட்டு, குடும்பமே தர்ணாவில் ஈடுபட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் மனைவிக்கு உசிலம்பட்டி ஒன்றியம் பாப்பம்பட்டியில் காலி நிலம் ஒன்று இருக்கிறது! அந்த நிலத்திற்கு தென்புறம் உள்ள வீட்டின் இடம் முத்துமாயக்கான் என்பவருக்கு சொந்தமானது.

முத்துமாயக்கான் மகள்கள் மற்றும் அவரது கணவர்கள் நான்கு நபர்களும் சேர்ந்து பாலமுருகனின் மனைவியை அடித்து துன்புறுத்தி அந்த நிலத்தை ஆக்கிரமிப்பதற்கு உண்டான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனராம். மேலும், நிலத்தை தரவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டினராம்.

இதனால் தங்களுக்கு நீதி வேண்டும் என்று கோரி பாலமுருகன் குடும்பத்தினருடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார். பின்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த காவல்துறையினர் பாலமுருகனுக்கு சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உத்தரவாதம் கூறி அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைக்க முயற்சித்தனர்!

இருந்த போதிலும் அவர்கள் நீதி கிடைக்காமல் வீட்டுக்கு செல்ல முன் வராததால் தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியே தர்ணாவில் குடும்பத்தினர் அமர்ந்துவிட்டனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.