தமிழகத்தில் இன்று… 5835 பேருக்கு தொற்று; 119 பேர் உயிரிழப்பு!

Published:

கொரோனா விவரம்
கொரோனா விவரம்

தமிழகத்தில் இன்று 5,835 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 119 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரம், இன்று 5146 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளனர். 

தமிழகத்தில் இன்று 5835  பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டது இதையடுத்து  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,20,355ஆக உயர்வு கண்டுள்ளது. 

இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,549 பேர் ஆண்கள், 2,286 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,93,226 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,27,100 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது. 

தமிழகத்தில் இன்று 5146 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர் இதையடுத்து தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 2,61,459 ஆக அதிகரித்துள்ளது 

சென்னையில் இன்று 989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது இதை அடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,13,058ஆக உயர்ந்துள்ளது.

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

தமிழகத்தில் கொரோனாவால் இன்று 119 பேர் உயிரிழந்தனர். இதை அடுத்து தமிழகத்தில் இதுவரை  5,397 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67,275 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டுள்ளது இதுவரையில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 33,75,596.

சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 4846 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது சென்னையை அடுத்து அதிக பட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 453 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது.  அடுத்து திருவள்ளூர்  மாவட்டத்தில் 390 பேருக்கு இன்று கொரோனா உறுதி  செய்யப்பட்டது.

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்

district-wise-covid-aug-13
district-wise-covid-aug-13

Related articles

Recent articles

spot_img