ஐசியு.,வில் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்! அபாயக் கட்டத்தை தாண்டி விட்டாராம்!

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
spb-singer
spb-singer

எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில், அவர் ஐசியுவில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவரது உடல் நிலையில் சீரான முன்னேற்றம் தென்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்ததாக செய்தி வெளியானது.

முன்னதாக, கொரோனா நோய் தொடர்பாக சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கானகந்தர்வ எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல்நிலை சீரியஸாக இருப்பதாக தெரிவிக்கப் பட்டது.

எஸ் பி பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் ஐசியுவில் சிகிச்சை பெற்று வருகிறார். அண்மையில் அவருக்கு கோரோனா நோய்த் தொற்று பரவியதால் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

spb-in-ventilator
spb-in-ventilator

ஆனால் நேற்று இரவு அவருடைய உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக ஆனதால் ஐசியூவில் சேர்க்கப் பட்டு, மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அப்போது அவருடைய உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளதாக எம்ஜிஎம் மருத்துவமனை மருத்துவர்கள் மருத்துவ அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

பிபி, சுகர் இவற்றோடு கூட கொரோனா நோய் அடையாளங்களும் அதிகமானதால் அவர் மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமப்படுவதாக தெரிந்தது. இந்த மாதம் 5 ஆம் தேதியிலிருந்து எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக ஆனதால் ரசிகர்களோடு கூட குடும்ப அங்கத்தினர்களும் கவலையில் ஆழ்ந்தனர்.

தனக்கு கோவிட் 19 பரவியதாகவும் தன்னை யாரும் போன் செய்து தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே தெரிவித்திருந்தார் பாலசுப்ரமணியம். உடல்நிலை நிலையாக இருப்பதாகவும் எப்படிப்பட்ட நோய் அடையாளங்களும் இல்லை என்றும் தான் ஓய்வில் இருப்பதால் யாரும் தன்னை போனில் அழைத்து தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இன்று மாலை 6 மணிக்குப் பின்னர் வெளியான செய்தியில் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும், அபாயக் கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் கூறப் பட்டது.

spb-condition
spb-condition

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.