ramasamy-advocate
ramasamy-advocate

இந்து மதத்திற்கு எதிராக தமிழக அரசு செயல்படுவதாக வழக்கறிஞர் ராமசாமி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 22-ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பல்வேறு இந்து அமைப்பினர் வழிபாடு நடத்துவது வழக்கம். பின்னர் அந்தச் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடல், ஆறு, குளங்களில் கரைக்கப்படும்.

ஆனால் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு நீடிப்பதால் தமிழகத்தில் விநாயகர் சிலைகளைப் பொது இடங்களில் வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

பல்வேறு இந்து அமைப்புகளும் எதிர்பை மீறி சிலை வைப்போம் என கூறியுள்ளனர். இந்நிலையில், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ராமசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய அனுமதியளிக்க வேண்டும். வேறு எந்த மாநிலத்திலும் இந்தத் தடை இல்லாத நிலையில் தமிழகத்தில் மட்டும் இப்படி ஒரு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்! மனதின் குரலில் பிரதமர்!

உரிய பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதிக்க வேண்டும். அதேபோல், விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு தடை விதித்த அரசாணை ரத்து செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்துள்ளார். இதனை விசாரித்த நீதிபதிகள் முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என கூறியுள்ளனர்.

மேலும் அவர் இந்து மதத்திற்கு எதிராக அரசு செயல்படுவதாவும் கூறினார்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending