மரத்தடியில் மரண வைத்தியம் ம.பி.யில் அதிர்ச்சி

சற்றுமுன்
IMG 20170914 WA0047 - 2026

பா.ஜ.க ஆளும் மாநிலமான மத்தியப் பிரதேசத்திலிருந்து மீண்டும் ஒரு விவகாரம்
அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசம் ராஜ்கார் மாவட்டத்தின் பையோரா பகுதியில் அமைந்துள்ள அரசு
மருத்துவமனைக்குப் பெண் ஒருவர் பிரசவத்துக்காக சென்றுள்ளார்.

அவருக்கு அங்குள்ள மரத்தடியின் கீழ் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மரத்துக்கு
அடியில் பெட் மற்றும் விரிப்பு இல்லாத இரும்புக் கட்டில் போடப்பட்டு அதில்
அவர் படுக்க வைக்கப்பட்டுள்ளார்.

அவருக்குப் போடப்படும் டிரிப்ஸ், மரக்கிளையில் பொருத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் இடமில்லாததால், அவருக்கு வெளியே இடமளிக்கப்பட்டுள்ளதாக
மருத்துவமனைத் தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.