கேரளத்தில் முதல்முறையாக பெண்ணுக்கு குண்டாஸ்

கஞ்சா விற்பனையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடிகட்டிப் பறந்து 10 குண்டாஸ்களைச் சந்தித்தவர் தலைநகர் சென்னையின் கஞ்சா வியாபாரி கிருஷ்ணவேணி.

கிருஷ்ணவேணி போன்ற வியாபாரிகளால் போதையின் பிடியில் சென்னைத் தள்ளாடிக்கொண்டிருக்கிறது.

கேரளத்தின் கொச்சி பறவபுழா பகுதியைச் சேர்ந்த ஷோபா ஜான் என்ற பெண், ஆள்கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 26 வழக்குகளில் முதல் குற்றவாளி. இப்போதுதான் முதல் முறையாக குண்டர் சட்டத்தில் கேரள அரசு அவரை ஓராண்டு சிறையில் அடைத்திருக்கிறது.

கேரளாவில் பெண் ஒருவர் முதல்முறை குண்டாஸில் சிறைக்குப் போன வரலாற்றுச் சாதனையும் இவருக்குக் கிடைத்திருக்கிறது. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமிகளை ஏமாற்றி பாலியல் குற்றத்தில் தள்ளிவிடுவார் என்பதே ஷோபாஜான் மீதான குற்றச்சாட்டு.

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஜெயச்சந்திரன் இதில் ஷோபாஜானுக்கு உடந்தையாக இருந்துள்ளார். ஷோபா ஜானுக்கு 18 ஆண்டுகளும் ஜெயச்சந்திரனுக்கு 11 ஆண்டுகளும் சிறைத்தண்டனை மற்றும் தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து கேரள நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.IMG 20170922 WA0033 - 2026

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

சென்னையைப் பொறுத்தவரை குற்றங்களே பயப்படும் அளவுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளைச் சந்தித்தவர் தாதா கிருஷ்ணவேணி ”குண்டர் சட்டத்தில் எத்தனை தடவை உள்ளே போனாங்கன்னு தெரியலே ஆனால், 10 தடவைக்கு மேலே இருக்கும்” என்று யோசித்துச் சொல்கிறார்கள் கீழ்ப்பாக்கம் காவல் மாவட்ட போலீஸார்.

சென்னை கீழ்ப்பாக்கம், டி.பி.சத்திரம் பகுதியில் போதை ஆசாமிகளுக்கும் போலீஸுக்கும் நன்கு அறிமுகமான பெயர் கிருஷ்ணவேணி. ‘பொட்டலம் கிச்சாக்கா’ என்பது கிருஷ்ணவேணியின் ‘நிக்’ நேம் என்கிறார்கள், ஏரியாவாசிகள்.

80 வயதான கிருஷ்ணவேணி, இன்று வரையில் கொஞ்சமும் சலிப்பில்லாமல் தன்னுடைய தொழிலை செய்து வருகிறார். தொழில் வாரிசாகப் பலரைக் குடும்பத்தில் உருவாக்கியிருந்தும், இதுவரையில் குடும்பத்தார் யாரும் சிறை வாழ்க்கையை அனுபவித்த தில்லை என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.

IMG 20170922 WA0032 - 2026ஶ்ர

குண்டர்தடுப்புக் காவல் சட்டம் கொண்டுவரப்பட்ட (1984) ஆண்டே ‘குண்டாஸ்’ சட்டத்தில் ஓராண்டு சிறையிலடைக்கப்பட்டவர் இந்த கிருஷ்ணவேணி. டி.பி.சத்திரம், மங்காதோட்டம், கீழ்ப்பாக்கம், ஓட்டேரி, பேசின்பாலம் போன்ற பகுதிகளில் இன்றளவும் கஞ்சாப் புகையின் நெடி அப்படியேதான் காற்றில் கலந்து இருக்கிறது. இன்னும் கிருஷ்ணவேணிகள் மாறவில்லை, கஞ்சா விற்பனையும் குறையவில்லை, வாங்கும் ஆட்களும் குறையவில்லை.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

போதைக்கு அடிமையாகிக் கிடக்கும் ஆசாமிகளால், சிறு சிறு திருட்டுகள் மிக சாதாரணமாக நடக்கிறது. குறிப்பிட்ட இந்தப் பகுதிகளுக்கு இப்போதையத் தேவை, முழுமையான ஒரு கவுன்சலிங் மட்டுமே… அதுதான் மாற்றத்துக்கு ஒரே வழி! அதைத்தான் அரசும் காவல்துறையும் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.

  • செய்தி… கே.சி.சாமி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories