மனைவிக்கு நேர்ந்த விபத்து! சுயநினைவு திரும்ப 3 மாதங்களாக காத்திருக்கும் கணவன்!

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
arun-sudha1

திருமணம் ஆன இரண்டு மாதத்தில் ஏற்ப்பட்ட வாகன விபத்தில் மனைவிக்கு சுயநினைவு இழந்ததால் அவரது கணவர் மனைவி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவார் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.

ஈரோட்டை சேர்ந்த தம்பதி அருண்- சுதா. அருண் சீனாவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இருவருக்கும் திருமணம் ஆகி 2 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் சீனாவில் வீடு பார்த்து விட்டு அழைத்து செல்வதாக கூறி அருண் சீனா சென்றுள்ளார். அங்கு சென்று வீடும் பார்த்து விட்டு சுதாவிற்கு சீனா செல்ல விமான சீட்டும் பதிந்துள்ளார்.

ஆனால் சீனா செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சுதா அவர் சகோதரருடன் வாகன விபத்தில் சிக்கியுள்ளார்.

அங்கு சுதாவிற்கு பின் தலை அடிப்பட்டுள்ளது. இதனால் 15 நிமிடத்தில் அவர் சுயநினைவை இழந்துள்ளார். அங்கிருந்த போக்குவரத்து காவலர் அவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு அவருக்கு மூளையில் இரத்த உறைவு ஏற்ப்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

arun-sudha

இதனால் அவர் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் சுயநினைவை இழந்துள்ளார். இதனால் அருண் 3 மாதங்களாக சுதாவுடன் இருந்து அவரை பாதுகாத்து வருகிறார்.

சுயநினைவு திரும்பாத சுதா அவ்வப்போது அருண் கூப்பிடும் போது மட்டும் திரும்பி பார்கிறார். சுதாவின் உயிரை காப்பாற்றிய போக்குவரத்து காவலர் மற்றும் மருத்துவர்களுக்கு அருண் நன்றி தெரிவித்து வருகிறார். மேலும் சுதா இயல்பு நிலைக்கு திரும்புவார் என அருண் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.