ஐந்தே மாதத்தில் இரட்டிப்பாகும் பணம்! நிதி நிறுவன மோசடி இருவர் கைது!

Published:

selam

சேலம் மாவட்டத்திற்கு அருகே உள்ள நெய்க்காரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாதேஷ். இவர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

இவரிடம் கடந்த 2019 வருடத்தில் கோவை புதூர் பகுதியைச் சார்ந்த கௌதம் ரமேஷ் மற்றும் பிரவீன் குமார் ஆகிய இருவர், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் என்டர்பிரைசஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும், ரூபாய் 25 ஆயிரம் முதலீடு செய்தால் ஐந்து மாதம் கழித்து ஐம்பதாயிரம் தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர்.

இதனைக்கேட்ட மாதேஷும் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பணம் திரட்டி ரூபாய் 20 லட்சம் முதலீடு செய்துள்ளார். ஆனால் இவருக்கு பணத்தை இரட்டிப்பாக்கி தரவில்லை மற்றும் அவரது நண்பர்களும், உறவினர்களும் பல முறை கேட்டும் பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நிறுவனத்தை மூடி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

மாதேஷின் உறவினர்கள் மற்றும் அவரது நண்பர்கள் கவுதம் ரமேஷ் மற்றும் பிரவீன் குமாருக்கு தொடர்பு கொண்டும் பலனில்லை என்பதால், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

இந்த புகாரை எந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ரமேஷ் மற்றும் பிரவீன் குமாரை கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே கேரள மாநிலம் பாலக்காட்டில் நிதி மோசடி தொடர்பாக வழக்குகள் இருப்பதாகவும், அவரது கூட்டாளியான பிரவீன் குமார் மற்றும் சிலர் சேர்ந்து சேலம், ஈரோடு, கோவை, கேரளா பகுதிகளில் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related articles

Recent articles

spot_img