சந்தன மரங்கள் கடத்திய 2 பேர் கைது: 4 பேர் தப்பி ஓட்டம்

நெல்லை மாவட்டத்தின் மேற்கு பகுதிகளான தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், புளியரை பகுதிகளின் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் அமைந்துள்ளது. இந்த மலை தமிழக – கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள பல்லூயிர் மலைகாடுகளாகும். இந்த மலையில் அதிகளவில் மூலிகைகள், விலை உயர்ந்த மரவகைகள் மற்றும் சந்தண மரங்கள் உள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதிகளில் வன விலங்குகளை வேட்டையாடுவது, சந்தண மரங்களை வெட்டி கடத்துவது போன்ற சமூக விரோத செயல்கள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழக – கேரள எல்லைப்பகுதிகளில் உள்ள வனப்பகுதியில் கேரள வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆரியங்காவு வனச்சரகத்திற்கு உட்பட்ட கடமன்பாறை பகுதியில் 6 பேர் கொண்ட கும்பல் மரத்துண்டுகளை கட்டி கொண்டிருந்தனர்.
வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்தனர். தப்பி ஓடியவர்களை வனத்துறையினர்விரட்டியதில் தென்காசி அருகே உள்ள ஊர்மேலழகியான் பகுதியை சேர்ந்த தங்கதுரை மற்றும் புளியங்குடி பகுதியை சேர்ந்த நாராயணன் ஆகிய இருவரும் பிடிபட்டனா;.
அவர்களிடம் இருந்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான 23 துண்டுகளாக வெட்டப்பட்ட சந்தண கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர் மேலும் தப்பி ஓடிய கடையநல்லூரை சேர்ந்த  வசந்தகுமார்,செங்கோட்டை அருகே உள்ள கற்குடியை சேர்ந்த இசக்கிதுரை, கோட்டூர்சாமி, புளியங்குடியை சேர்ந்த தவிடன் ஆகிய 4-பேரை வனத்துறையினா; தேடி வருகின்றனர்
கேரள மாநிலத்தில் 127 ஹெக்டேர் கொண்ட இரண்டாவது பெரிய சந்தணக்காடு இந்த கடமன்பாறை பகுதியாகும். இந்த கும்பல் வனப்பகுதியில் முதல் நாள் மரம் வெட்டும் சத்தம் கேட்டு வனத்துறையினர்  வந்த போது தப்பி ஓடி விட்டனர் பின்னர்  2 நாட்கள் வனப்பகுதியில் சமையல் செய்து அங்கேயே தங்கி இருந்து மீண்டும் அதே பகுதியில் மரத்தை வெட்டியுள்ளனர்
இவர்கள் இதே போல் அடிக்கடி இந்த தொழிலில் ஈடுபடுவதும், ஏற்கனவே இவர்கள் மீது சந்தண மரம் வெட்டி கடத்திய வழக்கு இருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories