தென்காசி அருகே பள்ளி கட்டட திறப்பு விழா

Published:

நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள அகரக்கட்டு புனித அருளானந்தர் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா, மற்றும் பள்ளி கட்டட திறப்பு விழா, ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.இதில் பள்ளியின் மாணவ, மாணவியர்கள் பயன் பெறும் விதமாக பொதுமக்களின் கூடுதல் முயற்சியினால் சுமார் 40 லட்சம் மதிப்பிலான வகுப்பறை கட்டிடங்களை தென்காசி குற்றவியல் நீதிமன்ற நடுவர் திருமதி திரிவேணி, பாளையம் கோட்டை மறை மாவட்ட ஜீடு பால்ராஜ், பேரருட்திருமுனைவர் சேவியர் டெரன்ஸ் ஆகியோர் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அகரக்கட்டு புனித அருளானந்தர் மேல்நிலைப் பள்ளி தாளாளர் அருட்பணி செல்வராஜ் சிறப்பாக செய்திருந்தார்

Related articles

Recent articles

spot_img