இது கனிமொழிக்கு தெரியுமா?!

Published:

jagan stalin - 2026

ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து வரும் விஐபி.க்கள் அரசியல்வாதிகள் பெரும்பாலும் திருப்பதி வேங்கடாசலபதி விக்ரஹம், அழகுச் சிலை, படம் என வாங்கி வந்து, அதை விருந்தினர்களுக்கு அல்லது முக்கியப் பிரமுகர்களுக்குக் கொடுப்பது வழக்கம்.

அப்படித்தான் இன்று ஆந்திரப் பிரதேச முதல்வராகப் பதவி ஏற்றுக் கொண்ட ஜெகன் மோகன் ரெட்டி, தன்னை வாழ்த்த வந்த திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திருப்பதி வேங்கடாசலபதி பெருமாள் அழகுச் சிலையை பரிசாக வழங்கினார்.

இந்நிலையில் இது குறித்த மீம்ஸ்கள், விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் களை கட்டுகின்றன. காரணம் கனிமொழி!

திருப்பதி பெருமாள் உண்டியலுக்கு பாதுகாப்புக்கு ஆள் எதற்கு? திருப்பதி பெருமாளுக்கு சக்தி இருக்கா என்றெல்லாம் கேள்விகள் கேட்டு, இந்துக்களின் மத நம்பிக்கைகளைக் கொச்சைப் படுத்தியவர். அவரது சகோதரர் ஸ்டாலினுக்கு தேர்தலுக்கு முன்னர் அவர் வீட்டுக்கு வந்த அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் கூட ஒரு திருப்பதி பெருமாள் சிலையைத்தான் பரிசளித்தார்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

இப்போது ஆந்திரப் பிரதேசத்தில் கனகதுர்கா வீற்றிருக்கும் விஜயவாடா நகரில் வைத்து நடைபெற்ற பதவியேற்பில் கலந்து கொள்ள வந்திருந்த ஸ்டாலினுக்கு அதே போல் திருப்பதி பெருமாள் சிலையைத்தான் பரிசளித்துள்ளார் ஜெகன்.

இதை அடுத்து நெட்டிசன்கள் இந்தக் கேள்வியைக் கேட்டு வருகின்றனர்… இது கனிமொழிக்குத் தெரியுமா?!

Related articles

Recent articles

spot_img