ஆகஸ்ட் இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் தேதி: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

Election Commission - 2026

ஆகஸ்ட் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஆகஸ்ட் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் ; ஜூலை 2வது வாரத்திற்கு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி முழுவதுமாக நிறைவடையும் என்று கூறியுள்ளது மாநில தேர்தல் ஆணையம்!

மேலும், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மட்டுமே மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப் படும் என்று கூறியுள்ள மாநில தேர்தல் ஆணையம்,  கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குச் சீட்டு முறையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்றும் கூறியுள்ளது.

எனவே தமிழகத்தில் ஆகஸ்ட் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.