தவறைத் தவிர்த்திருக்கலாம்: ரஜினியின் டிவீட்!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
rajini
rajini

ராகவேந்திரா மண்டப சொத்து வரி விவகாரம் நேற்று சமூகத் தளங்களில் பெரிதும் விவாதிக்கப் பட்ட நிலையில், இன்று தனது டிவிட்டர் பதிவில், தவறைத் தவிர்த்திருக்கலாம்; அனுபவமே பாடம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிக்கு சொந்தமாக சென்னை கோடம்பாக்கத்தில் ராகவேந்திரா திருமண மண்டபம் உள்ளது. இதற்கு 2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரைக்குமான ஆறு மாத காலத்துக்கு 6.50 லட்சம் ரூபாய் சொத்து வரி செலுத்தும்படி சென்னை மாநகராட்சி ‘நோட்டீஸ்’ அனுப்பியது.

இதை அடுத்து, சொத்து வரி மீது அபராதம் விதிக்க தடை விதிக்க வேண்டும் எனக் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ரஜினி மனு தாக்கல் செய்தார்.

மனு நீதிபதி அனிதா சுமந்த் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது குறித்து மாநகராட்சியில் முதலில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும், நோட்டீஸ் பெற்ற பத்து நாட்களுக்குள் நீதிமன்றத்தை அணுகியது ஏன்? இவ்வாறு வழக்கு தொடர்ந்து நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதற்காக அபராதம் விதிக்கப் போகிறோம் என்று நீதிபதி எச்சரித்தார். அதையடுத்து வழக்கை ரஜினி வாபஸ் பெற்றார்.

இந்நிலையில், நடிகர் ரஜினி டிவிட்டரில் வெளியிட்ட பதிவு:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.