இன்ஸ்ட்ராகிராம் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

அடடே... அப்படியா? சற்றுமுன் தொழில்நுட்பம் லைஃப் ஸ்டைல்
instagram
instagram

உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் பல கோடிக்கணக்கான பயனர்களை கொண்டு இயங்கி வருகிறது.

இந்த செயலியில் குறிப்பாக அதிக அளவு வாடிக்கையாளர்களை கொண்டுள்ள ரீல்ஸ் செயல்பாடுகளுக்கான நேரம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் செயலி உலகளவில் அதிகபட்ச வாடிக்கையாளர்களை கொண்டு செயல்பட்டு வரும் ஒரு முக்கியமான சமூக வலைதளமாகும்.

இந்த செயலியில் பயனர்களுக்கு கொடுக்கப்படும் ஒரு முக்கிய அம்சமான ரீல்ஸ் பல லட்ச வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது.

அதாவது இன்ஸ்டாகிராமில் பதிவிடப்படும் ரீல்ஸ் வீடியோக்களை காண்பதற்கே பல ஆயிரக்கணக்கான மக்கள் இன்ஸ்டாகிராம் செயலியை உபயோகப்படுத்திறார்கள் என்றால் மிகையாகாது.

அந்த அளவுக்கு பெயர் பெற்ற இன்ஸ்டாகிராமின் ரீல்ஸ் பயன்பாடுகளில், சினிமா பாடல்கள், உரையாடல்கள் உள்ளிட்டவைகள் ஆடியோ வடிவில் வர அந்த ஆடியோவுக்கு ஏற்றவாறு பயனர்கள், அதனுடன் தொடர்புடைய நடனம் மற்றும் நடிப்பை வெளிக்கொண்டு வருகிறார்கள்.

இந்த ரீல்ஸ் ஆனது சுமார் 30 வினாடி வீடியோவாக பதிவு செய்யப்பட்டு அதை இன்ஸ்டாகிராம் செயலியில் போஸ்ட் செய்ய அனுமதி அளிக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இவ்வகை ரீல்ஸ் வீடியோக்கள், மத்திய அரசால் தடை செய்யப்பட்ட டிக்டாக் செயலியை போன்றதாகும்.

அந்த வகையில் இன்ஸ்டாகிராம் செயலியை திறந்தாலே இவ்வகையான ரீல்ஸ் வீடியோக்கள் தான் அதிகளவில் இடம்பெற்றுள்ளன.

இந்த சேவைகளுக்கு மக்கள் மத்தியில் கிடைத்த பெரும் வரவேற்பை தொடர்ந்து 30 நிமிடங்கள் கொண்ட வீடியோ பதிவுகளை இனி 60 வினாடி வரை கண்டு மகிழும் வகையில் புதிய அம்சம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தவிர ரீல்ஸ் செயலியின் ஒரிஜினல் வடிவமான டிக்டாக்கில் 3 நிமிடம் உள்ளடக்கிய வீடியோக்களை பதிவு செய்யும் முறைகள் பயன்பாட்டில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.