
புதுக்கோட்டையில் நடந்த மார்கழி மகோத்ஸவம் விழா திருப்பாவை, திருவெம்பாவை பாடல் பாடி மாணவிகள் அசத்தினார்கள்.
புதுக்கோட்டையில் மார்கழி மகோத்ஸவம் விழா தைலா நகரில் துணை ஆட்சியர் ஓய்வு சுந்தராஜ் ஐயங்கார் நினைவுப்பரிசு திருப்பாவை பாடல் திருவெம்பாவை பாடல் போட்டி நடைபெற்றது
நிகழ்விற்கு இசையாசிரியை சௌமியா தலைமை தாங்கினார். அனைவரையும் சித்ரா சுந்தர்ராஜன் வரவேற்றார். ஆசிரியர் ரகுராமன் திருப்பாவை பாடல் திருவெம்பாவை பாடல் போட்டியினை தொடங்கி வைத்துப் பேசினார். மாணவ, மாணவியர் பலர் போட்டியில் கலந்து கொண்டு பாடினார்கள்

இசையாசிரியை சௌமியா ராணியார் பள்ளி ஆசிரியை கஜலெட்சுமி மற்றும் சித்ரா வைத்தியநாதன் நடுவர்களாக இருந்து போட்டியாளர்களை தேர்வு செய்தனர்
இதில் முதல் பரிசு மாணிக்க நந்தினிக்கும் இரண்டாம் பரிசு மனோ ஈஸ்வரனுக்கும் மூன்றாம் பரிசு நிவேதா நித்யஸ்ரீ, அக்ஷயாவுக்கும் கிடைத்தது. அவர்களுக்கான சுந்தராஜ் நினைவுப் பரிசுகளை சித்ரா, இசையாசிரியை சௌமியா வழங்கி பாராட்டினர்
விழாவில் வைத்தியநாதன், பிராமணர் சங்கம் சுப்புலெட்சுமி, அப்பர் நடுநிலைப்பள்ளி ஆசிரியை நிர்மலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிறைவாக நந்தகிஷோர் நன்றி கூறினார்.
- செய்தி: டீலக்ஸ் சேகர், புதுக்கோட்டை