
கிராம சபைக் கூட்டம் என்ற சொல்லை திமுக., பயன்படுத்துவது தவறானது. பொதுவாக கிராம சபைக் கூட்டம் என்பது உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப் பட வேண்டியது.
கிராம சபை என்பதே, மக்களாட்சியின் அடிப்படைகளில் ஒன்று! இங்கே மக்கள் கேள்வி கேட்கலாம். தங்களுக்கான பிரச்னைகளைச் சொல்லி தீர்வு காண வேண்டிய இடம். இதற்கு தீர்வு கொடுக்கும் இடத்தில் இருப்பவர்கள் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் சேவைத் துறையில் உள்ள அரசு அதிகாரிகள்!
ஆனால், கிராம சபை என்று பெயர் வைத்து, திமுக., ஒரு பஞ்சாயத்து செட்டப்பில் கூட்டம் நடத்துவது தவறானது. மேடை போட்டு, மேடையில் உள்ள அரசியல் பிரமுகர்கள் தலைவர்கள் பேசினால் அது கட்சிக் கூட்டம். அதுவே, ஒரு ஆல மரத்தை, அரச மரத்தடி திண்ணை மீது அமர்ந்து கொண்டு பேசினால், அது பஞ்சாயத்து. அதையே ஸ்டாலின் மாதிரியான நபர்கள் செய்தால், அது கட்டப்பஞ்சாயத்து!
காரணம், நேற்றைய கோவை நிகழ்வுகள் ஸ்டாலினின் ரவுடித் தனத்தை கட்டம் போட்டுக் காட்டியிருக்கிறது. ஜனநாயக நாட்டில், இப்படி எவரும் பொதுப்படையாக, பொது வெளியில் ஒரு மாநிலத்தை ஆளும் முதலமைச்சரையோ, அரசியல் கட்சியினரையோ, பொதுமக்களையோ மிரட்டியதில்லை. கேரளத்தில் கம்யூனிஸ்ட்கள் கூட மறைமுக மிரட்டலைத்தான் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால், தமிழகத்தில் ஸ்டாலின் மேடையிலேயே, கடுமையான தாக்குதல் ரவுடியிச கட்டப்பஞ்சாயத்து மிரட்டல் எல்லாம் விடுக்கிறார்.
திமுக.,வின் தொடக்க கால அரசியல் நடவடிக்கையில் இருந்து இன்று வரை அக்கட்சி அதே ரவுடியிச மிரட்டல் பாதையிலேயே பயணிக்கிறது என்பதற்கு எடுத்துக் காட்டாகத்தான் இது அமைந்திருக்கிறது..
கோவையில் எதிர்க்கேள்வி கேட்ட பெண்மணியை திமுக.,வினர் ஆபாச வார்த்தைகளில் பேசியும், திட்டியும் அடிக்கப் பாய்ந்து துரத்தியும் தங்கள் இயல்பான உடல்மொழியைக் காட்டியிருக்கிறார்கள்.
திமுக., தொப்பி அணிந்து வரவேண்டும், திமுக.,வினர் தான் அங்கே இருக்க வேண்டும், அல்லது திமுக.,வினர் கூட்டத்துக்கு ஆள் சேர்க்க கூலி கொடுத்து அழைத்து வரப்பட வேண்டும், அங்கே எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது, அமைதியாக அமர்ந்திருக்க வேண்டும் என்றெல்லாம் கட்டளை யிடுவதாயிருந்தால், இந்தக் கூட்டத்தை திமுக.,வின் மரத்தடிக் கூட்டம் என்றே விளம்பரப் படுத்தியிருக்க வேண்டும், மாறாக கிராம சபைக் கூட்டம் என்றெல்லாம் விளம்பரப் படுத்துவதை நடுநிலை நீதிபதிகள் நிச்சயம் கண்டித்து, ஒரு நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும்!
கிராம சபை கூடà¯à®Ÿà®®à¯ எனà¯à®ªà®¤à¯ ஒர௠பதிவ௠செயà¯à®¯à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿ தலைபà¯à®ªà¯ˆà®ªà¯à®ªà¯‹à®². அரசைத௠தவிர வேற௠யாரà¯à®®à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤ அநà¯à®®à®¤à®¿à®•à®•à¯ கூடாதà¯.