
- ஆந்திராவில் மற்றுமொரு கொடூரம். டிசம்பர் 29ம் தேதி ராம தீர்த்தம் கோயில் துவம்சம்.
- ஜீசஸ் சிலையின் தலையை வெட்டினால் எப்படி இருக்கும் என்று ஜெகன் மீது ஆத்திரம் அடைந்த பக்தர்கள்.
ஆந்திரப் பிரதேசத்தில் ஹிந்து கோவில்கள் தொடர்பாக மற்றும் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. சிறிய, பெரிய ஆலயங்களில் அடிக்கடி யூகிக்க முடியாத அளவில் சம்பவங்கள் நடந்து வருகின்றன நிலையில் புதிதாக விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ராம தீர்த்தம் கோவிலில் ராமர் சிலை உடைப்பு நடந்துள்ளது. ராம தீர்த்தம் போடி மலைமீதுள்ள கோதண்டராம சுவாமி கோயிலில் ஸ்ரீராமரின் விக்ரகத்தின் தலையை உடைத்து புதரில் வீசி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்னும் சில மணிநேரங்களிலேயே முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி விஜயநகரம் மாவட்டத்தில் பயணிக்க இருந்த நேரத்தில் நடந்த இந்த சம்பவம் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
விஜயநகரம் மாவட்டத்தில் 12 கிலோமீட்டர் தூரத்தில் நெல்லிமர்ல மண்டலத்தில் ராமதீர்த்தில் உள்ள கோதண்டராம சுவாமி ஆலயத்திற்கு 400 ஆண்டுகள் வரலாறும் புகழும் உள்ளது. மலைமீதுள்ள ஆலயத்தில் ஸ்ரீ ராமரின் விக்கிரகத்தின் தலை உடைபட்டு வீசிஎறியப் பட்டுள்ளதை உள்ளூர் மக்கள் செவ்வாயன்று பார்த்தார்கள்.
அடையாளம் தெரியாத குண்டர்கள் கோவிலை தாக்கி உள்ளார்கள் என்ற செய்தியறிந்த ராம தீர்த்தம் கிராம மக்கள் நூற்றுக் கணக்கில் போடி மலை மீது ஏறினார்கள் மாவட்ட எஸ்பி ராஜகுமாரி கூட அங்கு வந்து க்ளூ டீமை பணியில் இறக்கினார். வழக்குப் பதிவு செய்து கொண்டு குண்டர்களை அடையாளம் காணும் முயற்சியை செய்துள்ளோம் என்று எஸ்பி மீடியாவுக்கு தெரிவித்தார்.

ஆந்திரப் பிரதேசத்தில் மட்டுமே அல்லாமல் நாடெங்கிலும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான ராம தீர்த்தத்தில் ஸ்ரீராமர் விக்கிரகம் சிலை உடைப்புக்கு ஆளான செய்தியை கேள்விப்பட்டவுடன் அனைத்து கட்சி தலைவர்களும் போடி மலைக்கு வந்து சேர்ந்தார்கள்.
உள்ளூர் நெல்லிமர்ல ஒய்சிபி எம்பி அப்பள நாயுடு சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை பரிசீலித்தார். ஆலயங்களின் மீது தாக்குதல் பழக்கமாகி விட்டது என்றும் இதற்கு அரசாங்கமே பொறுப்பு ஏற்கவேண்டும் என்றும் ராமரின் விக்கிகத்தை உடைத்த குண்டர்களை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என்றும் டிமாண்ட் செய்து விஜயநகரம் மாவட்டம் பிஜேபி தலைவர் பாவனி தலைமையில் தார்ணா நடத்தினார்கள்.
தெலுங்கு தேசம் பார்ட்டி மாவட்ட தலைவர் ரவிசங்கரோடு பல தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி விஜயநகரம் மாவட்டம் சுற்றுப்பயணத்திற்கு சில மணி நேரங்கள் முன்பாகவே ராம தீர்த்தம் கோவிலில் விக்ரகம் உடைபட்ட சம்பவம் நடந்தது கவனிக்கத்தக்கது.

விஜயநகரம் மாவட்டம் ராம தீர்த்தம் மலை மீதிருந்த கோதண்டராம சுவாமி விக்கிரகம் வேண்டுமென்றே தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது என்றும் ஒரு திட்டப்படியே மாநிலத்தில் உள்ள ஆலயங்கள் மீது வரிசையாக தாக்குதல் நடந்து வருகிறது என்றும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றம் சுமத்தினார்.
அந்தர்வேதி, பிட்யகுண்ட கோவில்களில் உள்ள ரதங்களுக்கு நெருப்பு வைத்த சம்பவத்திள்கு காரணமான குற்றவாளிகளை மீது அப்பொழுதே நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்தால் இவ்வாறு நடந்திருக்காது என்று கூறினார். ஜெகன் அரசாட்சியில் மனிதர்களுக்கு மட்டுமல்ல ஆலயங்களுக்கும் தெய்வ விக்கிரகங்களுக்கும் கூட பாதுகாப்பு இல்லை என்று சந்திரபாபு வருத்தம் தெரிவித்தார்.
ராம தீர்த்தம் சம்பவம் குறித்து யுவஜன ஸ்ராமிக விவசாய காங்கிரஸ் கட்சி எம்பி ரகுராமகிருஷ்ணம் ராஜு தீவிரமான விமர்சனம் செய்தார். ராமர் விக்ரகத்தின் தலையை வெட்டி எடுத்துச் சென்ற சம்பவம் குறித்து முதல்வருக்கு வெட்கம் இல்லையா? அதே ஜீசஸ் விக்கிரகத்தின் தலையை வெட்டி யாராவது தூக்கி எறிந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்க மாட்டாரா?
ஹிந்து தெய்வங்களின் விக்ரகங்களை துவம்சம் செய்தால் அரசாங்கம் கடும் நடவடிக்கைகள் எடுத்து குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில்லையே ஏன்?
முதல்வருக்கு ஹிந்துக்கள் என்றால் அத்தனை ஏளனமா? கோவில்களில் மீது தாக்குதல் செய்பவர்களை பிடித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு ஏன் உத்தரவுகள் அளிப்பதில்லை?
இந்த அரசாங்கத்தில் வரிசையாக நடக்கும் சம்பவங்கள் ஹிந்துக்களின் மனநிலையை பாதித்து வருகின்றது இப்போது தயவு செய்து கடின நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளுங்கள்…. என்று யுவஜன ச்ராமிக விவசாய காங்கிரஸ் கட்சி தலைவர் ரகுராமகிருஷ்ணம் ராஜூ தெரிவித்தார்.
ராமர் கோயில் சிலைஉடைத்த சம்பவத்தை பார்வையிட வந்த விஜய் சாய ரெட்டியின் கார் மீது தெலுங்குதேசம்கட்சித் தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதால் ராம தீர்த்தத்தில் தீவிர பரபரப்பு ஏற்பட்டது.
ராம தீர்த்தம் க்ஷேத்திரம் ரணகளமாக மாறியது. அரசியல் தலைவர்கள் போட்டி போட்டுக் கொண்டு அங்கு பயணித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமதீர்த்தத்தில் ராமர் விக்கிரகத்தின் தலையை உடைத்த சம்பவம் குறித்து அரசியல் தலைவர்கள் போட்டி போட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
இந்த வரிசையில் கோவிலைத் தரிசிப்பதற்கு சந்திரபாபு திட்டமிட்டார். ஆனால் அவரைவிட முன்பே எம்பி விஜயசாயிரெட்டி ராம தீர்த்தம் வருவதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கூறியபடியே போடிமலைமீது சென்று ராமரை தரிசித்து கொண்டார். அதன் பின்பு அங்கிருந்து திரும்பும் போது தீவிரமான பரபரப்பும் ஏற்பட்டது
விஜயசாயிரெட்டிக்கு எதிராக தெலுங்கு தேசம் பார்ட்டி தலைவர்கள், காரிய கர்த்தாக்கள் ஆத்திரம் அடைந்தார்கள். தம்முடைய தலைவர் சந்நிரபாபு நாயுடுவின் பயணத்திற்கு தடையாகவே அங்கு வந்துள்ளார் என்று விமர்சித்தனர். சில கட்சி தொண்டர்கள் கற்களும் செருப்புகளும் விவசாயிரெட்டியின் கார் மீது வீசி எறிந்தார்கள்.
மறுபுறம் சந்திரபாபு ராம தீர்த்தம் பயணத்திற்கு தடை ஏற்பட்டது விசாகப்பட்டினத்தில் இருந்து ராம தீர்த்தத்திற்கு பேரணியாக கிளம்பிய சந்திரபாபு கான்வாயை விஜயநகரம் 3 ரோடு ஜங்ஷன் அருகில் போலீசார் தடுத்தனர். கான்வாயை அனுமதிக்க முடியாது என்று தெளிவுபடுத்தினர். அதனால் போலீசாருக்கும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர்களுக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. கான்வாயை அனுமதிக்க வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார் சந்திரபாபு நாயுடு.
அனுமதிக்காவிட்டால் இங்கிருந்து நகர மாட்டோம் என்று சந்திரபாபு எச்சரித்தார். ராம தீர்த்தம் அருகில் தற்போது மூன்று தலைவர்களும் மூன்று கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களும் வந்து சேர்ந்தார்கள். சந்திரபாபு பயணம் மேற்கொண்டதால் தெலுங்குதேசம் தொண்டர்கள் மிகப் பெருமளவில் வந்து சேர்ந்தனர் விஜய்சாயி ரெட்டி சென்றதால் ஒய்சிபி தொண்டர்கள் கூட அங்கு பெருமளவில் வந்து சேர்ந்தனர்.
அடுத்து பிஜேபி தலைவர்களும் தொண்டர்களும் கூட ராம தீர்த்தத்திற்கு வந்தடைந்தனர். ராம விக்ர சிலை உடைப்பை எதிர்த்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். தாம் கூட மலைமீது செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்றும் போலீசாருக்கு டிமாண்ட் செய்து வருகின்றனர். 3 கட்சிகளின் போராத்தத்தில் ஹைடென்ஷன் நிலவுகிறது.

ஆனால் விஜய் சாய் ரெட்டி சென்றபோது அவருக்கு எல்லா விதத்திலும் உதவி புரிந்தனர் அதிகாரிகள். சந்திரபாபு நாயுடு சென்ற போது முதலில் அனுமதி மறுத்த போலீசார் சற்று நேரம் கழித்து அவருக்கு மலைமீது செல்வதற்கு அனுமதி அளித்தனர். ஆனால் கோவிலுக்கு சென்ற சந்திரபாபுவுக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. அங்கு அதிகாரிகள் இவர் செல்லும் முன்பாகவே கர்பாலயத்தின் கதவுகளை மூடிவிட்டு சிதைவு பட்ட ராமர் விக்கிரகத்தை தரிசிக்க சந்திரபாபுவுக்கு வழி வகுக்கவில்லை.
சந்திரபாபு நாயுடுவும் லோகேஷும்தான் வேண்டுமென்றே குண்டர்களை ஏவி ராமர் விக்ரகத்தை உடைத்து விட்டு பழியை ஜெகன் மீது போடுகிறார்கள் என்று ஒய்சிபி கட்சித் தலைவர்கள் குற்றம் சுமத்தி வருகிறார்கள்.
சிம்ஹாசலம் நரசிம்ம ஸ்வாமி எதிரில் சத்தியம் செய்யத்தயாரா என்று தெலுகு தேசம் தலைவர்கள் சவால் விடுத்துள்ளனர்.