எடப்பாடியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு; தாயார் உருவப் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
stalin-palanisami
stalin-palanisami

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில் சென்று சந்தித்தார் மு.க. ஸ்டாலின். முதலமைச்சரின் தாயார் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் ஸ்டாலின். அப்போது, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் பொன்முடி ஆகியோரும் முதலமைச்சர் இல்லத்திற்கு உடன் வந்தனர் 

முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவை ஒட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்துக்கு நேரில் சென்று, அவரது தாயார் மறைவுக்கு ஆறுதல் கூறினார். 

stalin-palanisami1
stalin-palanisami1

தமிழக முதல்வர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் அவரது 93ஆவது வயதில்  உடல்நலக்குறைவால் கடந்த அக்.12ஆம் தேதி காலமானார்.  சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இதற்காக தனது சொந்த கிராமத்துக்குச் சென்றிருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இந்நிலையில், சென்னை திரும்பிய முதல்வர் பழனிசாமியின் பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.  தாயார் தவுசாயம்மாள் மறைவு குறித்து கேட்டறிந்த ஸ்டாலின், பின்னர் அங்குள்ள பழனிசாமி தாயார் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.