covid virus - 2026

செப்.16: தமிழகத்தில் 463 பேருக்கு கொரோனா!

சற்றுமுன் அடடே... அப்படியா? சென்னை தமிழகம்
covid virus - 2026
COVID19 3

தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,040 ஆக உள்ளது என்று, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக 463 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 35,75,843 என அதிகரித்துள்ளது.

சென்னையில் புதிதாக 103 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 788937 ஆக அதிகரித்துள்ளது.

கோவையில் புதிதாக 60 பேருக்கு பாதிப்பு கண்டறியப் பட்டது. இதை அடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 339804 ஆக உள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 436 பேர், கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 35,32,983 என அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று ஒருவர் உயிரிழந்தார். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 38,040 ஆக உள்ளது.

முழு தகவல்:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.