சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் பார்ப்பன சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. அவரோடு அவரின் உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் 4 வருட தண்டனைக்காலம் வருகிற ஜனவரி மாதம் முடிவடைகிறது.
அதேநேரம் நன்னடத்தை விதிப்படி அவருக்கு மாதம் 3 நாட்கள் கழித்தால் அவரின் தண்டனைக்காலத்திலிருந்து 129 நாட்கள் குறையும் என்பதால் எப்போது வேண்டுமானாலும் அவர் விடுதலை செய்யப்படுவார் என அவரின் வழக்கறிஞர் இன்று காலை தெரிவித்துள்ளார்.
ஆனால், சசிகலாவுக்கு விடுதலையில் எந்த சிறப்பு சலுகையும் கிடையாது. நீதிமன்ற தீர்ப்பின்படியும் சிறைச்சாலை விதியின் படியும் மட்டுமே சசிகலா விடுதலை செய்யப்படுவார் என கர்நாடக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனவே, ஜனவரி மாதம் 27ம் தேதியே சசிகால விடுதலை ஆவார் எனத்தெரிகிறது.
Source: Dhinasari – Daily Tamil News – Vellithirai News