panthor
panthor

சிறுத்தையை பிடித்து சாலையில் ஆட்டுக்குட்டியை போல நடத்தி வந்தார் காட்மாண்டுவில்.

சாதாரணமாக யாராவது புலியையோ சிறுத்தைபுலியையோ பார்த்தால் அதிகாரிகளுக்கு தெரிவிப்பார்கள். அவர்கள் என்ன செய்வார்கள்? அனைத்து ஏற்பாடுகளோடும் வந்து அந்த மிருகத்தை துப்பாக்கியால் சுட்டு மயக்கமருந்து அளிப்பார்கள். மயக்கத்தில் விழுந்த பின் அதனை கூண்டில் அடைத்து எடுத்துச் சென்று காட்டில் விடுவார்கள்.

ஆனால் நேபால் போலீசார் மட்டும் அதற்கு மாறாக நடந்து உள்ளார்கள். சிறுத்தைப்புலியின் கழுத்தில் கயிறு கட்டி ஆட்டை எடுத்துச் செல்வது போல சாலையில் நடத்தியே அழைத்துச் சென்றார்கள்.

பர்பத் மாவட்டம் ஜல்ஜலா கிராமத்தில் உள்ள புதரில் சிறுத்தையை கவனித்த உள்ளூர்வாசிகள் அதிகாரிகளுக்கு செய்தியைத் தெரிவித்தார்கள்.

அதனால் மிலான்சவுக் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து புலியை பிடித்தார்கள். அதன்பின் அதன் கழுத்தில் ஒரு கயிறு கட்டி ஆட்டுக்குட்டி யை அழைத்துச் செல்வது போல சாலை வழியாக எடுத்துச் சென்றார்கள்.

ALSO READ:  திமாகி நக்சல்கள் – யார் என்று சொல்லவும் வேண்டுமோ?

இந்த காட்சிகளை உள்ளூர்வாசிகள் கேமராக்களில் பிடித்து சோசியல் மீடியாவில் போஸ்ட் செய்ததால் அது வைரல் ஆகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending