bus stand telangana
  • கில்லாடி கிட்னாபர்… நான்கு மணி நேரத்திற்குள் பிடிபட்டனர்.
  • 3 வயது சிறுமியை தூக்கி சென்ற பெண்…
  • சிசிடிவி புடேஜ் பார்த்து கண்டுபிடித்த போலீசார் .

பரபரப்பு ஏற்படுத்திய 3 வயது சிறுமி கிட்னாப் வழக்கினை ஹைதராபாத் போயன்பல்லி போலீசார் 4 மணி நேரத்திற்குள் கண்டறிந்து சிறுமியை தாயின் மடியில் சேர்த்தனர்.

மெதக் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்வரூபா இரண்டு நாட்கள் முன்பு கணவரோடு தகராறு செய்து கொண்டு சிகந்திராபாதுக்கு வந்தார். ரயில்வே ஸ்டேஷன் அருகில் மகளோடு சேர்ந்து இருக்கையில் ஒரு மனிதர் அவளை கவனித்து விவரங்களை கேட்டறிந்து கொண்டார்.

அதன் பின் அந்த மனிதர் மியாபூரில் உள்ள நாகம்மாவிடம் இந்த விஷயத்தை தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும் எவ்வாறாவது அந்த சிறுமியை கிட்நாப் செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டினர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள ஸ்வரூபாவுக்கு மாய வார்த்தைகள் கூறி மியாபூரில் நாகம்மா வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். திங்களன்று காலை வீட்டிலேயே டிபன் செய்து மதியம் போயின்பல்லி சௌராஸ்தாக்கு சென்றனர்.

சிறுமியின் கிட்னாப்புக்கு திட்டம் தீட்டிய நாகம்மா தன்னிடமிருந்த 50 ரூபாயை ஸ்வரூபாவிடம் கொடுத்து போலீஸ் ஸ்டேஷன் எதிரில் உள்ள ஹோட்டலிலிருந்து சாப்பாடு வாங்கிவரச் சொல்லி அனுப்பினாள்.

ALSO READ:  தொடரும் தெய்வத்திருமேனிகள் திருட்டு; இந்து முன்னணி கண்டனம்!

அந்த சமயத்தில் ஸ்வரூபாவின் மகள் சரிதா, நாகம்மா அருகிலேயே இருந்தாள். இந்த வாய்ப்பை தவற விடாத நாகம்மா மூன்று வயது சரிதாவை எடுத்துக்கொண்டு நிஜமாபாத் பஸ் டிப்போ சென்று பஸ் ஏறி சென்றுவிட்டாள். சாப்பாடு பார்சல் வாங்கிக்கொண்டு வந்த ஸ்வரூபாவுக்கு நாகம்மாவும் மகள் சரிதாவும் அந்த மனிதரும் தென்படவில்லை.

கவலை அடைந்து பதற்றமான ஸ்வரூபா அருகிலேயே இருந்த போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தாள். முதலில் போலீஸ் ஸ்டேஷன் முன்புள்ள சிசி கேமராவை எஸ்ஐ சுதாகர் ரெட்டி பரிசீலித்தார்.

ஒரு பெண் ஒரு சிறுமியை தூக்கிக்கொண்டு நிஜாமாபாதைச் சேர்ந்த பஸ்ஸில் ஏறுவதை கண்டறிந்தார்கள். இதனால் சிஐ அஞ்ஜய்யா உத்தரவுப்படி உடனுக்குடன் நிஜாமாபாத் பஸ் டிப்போ மேனேஜருக்கு போன் செய்து பஸ் விவரங்களோடு கூட டிரைவர் கண்டக்டர் போன் நம்பர்களையும் சேகரித்து அவர்களுடன் பேசினர். அதற்குள் அந்த பஸ் ராமாயம்பேட்டை வரை சென்றுள்ளதாக அறிந்துகொண்டார்கள். அங்குள்ள போலீசாரையும் எச்சரிக்கை செய்ததால் அவர்கள் செக்போஸ்ட் ஏற்பாடு செய்து நாகம்மாவை கஸ்டடியில் எடுத்துக்கொண்டார்கள்.

ALSO READ:  இமயமலையில் சீனக் கட்டுமானங்களே வெள்ளத்திற்குக் காரணமா?

அதற்குள் ஒரு போலீஸ் வாகனத்தை ராமாயம்பேட்டை அனுப்பினர். அங்கிருந்து நாகம்மாவோடு கூட சரிதாவையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தார்கள். சிறுமியை பத்திரமாக தாயிடம் ஒப்படைத்தார்கள்.

வெறும் நான்கு மணி நேரத்திலேயே கிட்னாப் மிஸ்ட்ரியை உடைத்து குற்றவாளியை கைது செய்த சிஐ அஞ்ஜய்யா, எஸ்ஐ சுதாகர் ரெட்டி, கான்ஸ்டபிள் மோகன் ஆகியோரை நார்த்ஜோன் டிசிபி கள்மேஷ்வர் சிங்கன்வார், பேகம்பேட் ஏசிபி நரேஷ்ரெட்டி பாராட்டினர்.

சிசி கேமரா ஆதாரமாக குற்றவாளிகளை கண்டுபிடித்தாக சிஐ குறிப்பிட்டார். பத்திரமாக தன் மகள் தன்னிடம் சேர்ந்ததால் அந்தத் தாய் மகிழ்ச்சி அடைந்தாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending